Header Ads



துஆ கேட்கும் முறை, நபிமார்கள் காட்டும் வழி - "முதலில் பாவமன்னிப்பு கேளுங்கள்"


قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
‏ 

38:35. “என் இரட்சகனே என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.


இது நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்ட துஆ 


நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனக்கு ஆட்சி  வேண்டும் எனகேட்கும் முன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு  கேட்கிறார்கள்..


காரணம் நாம் செய்யும் பாவம்தான் அல்லாஹ்வின் அருள் நமக்கு கிடைக்காமல் தடுப்பது,


நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் மட்டுமல்ல எல்லா நபிமார்களும் பாவமன்னிப்புடன் தான் துஆ கேட்டுள்ளார்கள் 


நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ 


71:28 رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا‏ 


71:28. “என் இரட்சகனே எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்கள்

 

7:151 قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ ‌ۖ  وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏ 


7:151. “என் இரட்சகனே என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  


நபி மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் 


اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا‌ وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ‏


நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.  7:155


நபி இப்ராகிம் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் 


رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ‏ 


14:41. “எங்கள் இரட்சகனே என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்)

.

நமது நபிமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்களுக்கு அல்லாஹ் கற்று கொடுதத துஆ 


23:118 وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‏ 


23:118. இன்னும், “என் இரட்சகனே நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!


رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ‌ۚ‏


எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” 3:193.


يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا‌ ۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْ


அவர்கள் “எங்கள் இரட்சகனே எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.


நமது நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அதிகமாக ரப்பே என்னை மன்னிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக “என அதிகமாக துஆ செய்து கொண்டிருப்பார்கள்  எனவே நாம் அல்லாஹ்விடம் நமது தேவைகளை கேட்கும்போது அதிகமாக இஸ்திஃபார் செய்தும் துஆ விலும் பாவமன்னிப்பும் கேட்டும் 

அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும்.


-இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயீ-

No comments

Powered by Blogger.