Header Ads



இறைவன் நாடினால் அதனை எந்த ஒரு சக்தியினாலும், தடுக்கமுடியாது என்பதற்கு இது உதாரணம் (படங்கள் இணைப்பு)



2021 மார்ச் மாதத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் FIFA போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. 


அந்நேரம் போர்த்துக்கல் காட்பந்தாட்ட அணிக்கும், சேர்பிய காட்பந்தாட்ட அணிக்கும் இடையிலும் போட்டி ஒன்றும் இடம்பெற்றது.


அப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘அடித்த 100% சரியான கோல்’ ஐ நடுவர் அங்கிகரிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரோனால்டோ நடுவரிடம் சுட்டிக்காட்டினார். 


இதற்க்காக நடுவர் அவரை மஞ்சள் அட்டையைகாட்டி போட்டியிலிருந்து வெளியேற்றினார். 


இதனால் ரொனால்டோ தனது முழங்கையில் கட்டியிருந்த Armband ஐ பிடுங்கி எறிந்து விட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். 


பின்னர் இக்காட்சியை வீடியோவில் பார்த்த நடுவர் தவறான தீர்ப்பிற்கு மன்னிப்புக்கோரினார்.


Armband ஐ பொறுக்கிய தீயணைப்புப்படைவீரர் GAVRILO DJURDJEVIC அதனை இணையத்தில் ஏலத்தில் விற்றார். அதற்கு 75000 அமெரிக்க டாலர்கள் கிடைத்தது.


நடுவரின் நடத்தை வெளிப்படையாக அநியாயமாக தோன்றினாலும், அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் இதன்பின்னால் இருந்த இறைவனின் தேட்டம் என்னவாயிருந்தது என்பதை உணர்த்தியது. மக்கள் இறைவனை புகழ்ந்தார்கள்.


செர்பியாவில் ஆறுமாத வயதையுடைய GAVRILO DJURDJEVIC ஆண்குழந்தை ஒன்று உயிருக்காக போராடிக்கொண்டிருந்தது. அதன் முள்ளந்தண்டில் ஏற்பட்டிருந்த (spinal muscular atrophy) வருத்தத்திற்கு சிகிச்சைக்கு 2.36 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. தொண்டு நிருவனம் ஒன்று இந்நிதியை திரட்டிக்கொண்டிருந்தனர். 


GAVRILO DJURDJEVIC ஏலத்தில் பெரப்பட்ட பணத்தை அக்குழந்தையின் மருத்து செலவிற்க்காக வழங்கி குழந்தையின் உயிரைக்காப்பாற்ற உதவினார்.


அக்குழந்தையின் தாய்;


“எங்களை அறியாத சில மனிதர்கள் Armband ஐ எடுத்து, அதனை ஏலத்தில் விற்று, எங்கள் குழந்தைக்கு உதவுவார்கள் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை” என்றார்.


ஒரு மனிதனுக்கு இறைவன் ஒரு நன்மையையோ தீமையையோ செய்ய நாடினால் அதனை எந்த ஒரு சக்தியினாலும் தடுக்கமுடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.


AKBAR RAFEEK






No comments

Powered by Blogger.