Header Ads

முஸ்­லிம்­களே,, இது உங்கள் சொத்து - இதனைப் பாதுகாக்க நீங்கள் முன்வர வேண்டும்


- ஏ.ஆர்.ஏ.பரீல் -


அன்று கொழும்பு 14 கிரேண்ட்பாஸ் வீதியில் கம்­பீ­ர­மாக காட்­சி­ய­ளித்த பழை­மை­வாய்ந்த சுலைமான் வைத்­தி­ய­சாலைக் கட்­டி­டத்தை இன்று காண­வில்லை. அந்தக் காணி மாத்­தி­ரமே இன்று எஞ்­சி­யி­ருக்­கி­றது. அங்கே புதிய கட்­டி­ட­மொன்று அவ­சர அவ­ச­ர­மாக எழுப்­பப்­பட்டு வரு­கி­றது.


முஸ்லிம் மாண­வர்­களின் கல்­வி­மேம்­பாட்­டுக்­கான நிதி­யு­த­வி­யினைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வக்பு செய்­யப்­பட்ட சுலைமான் வைத்­தி­ய­சாலைக் கட்­டிடம் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டு­விட்­டது. என்­றாலும் சுலைமான் என்ற பெயரும் அதனை வக்பு செய்த அப்துல் கபூர் ஹாஜியாரின் பெயரும் ஒரு­போதும் மக்கள் மனங்­க­ளி­லி­ருந்தும் அகன்று விடப்­போ­வ­தில்லை.


மர்ஹூம் என்.டி.எச்.அப்துல் கபூர் என்ற பெருந்­த­கையின் வக்பு சொத்­துக்­க­ளுக்கு அவ­ரது குடும்­பத்­தி­லி­ருந்தே சவால்கள் ஏற்­பட்­டுள்ள இன்­றைய நிலையில் நாம் அந்தப் பெருந்­த­கைக்­காக பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டுவோம். அவ­ரது அன்­றைய கன­வுகள் சிதைந்­து­வி­டாமல் இருப்­ப­தற்­காக இறை­வ­னிடம் கையேந்­துவோம்.


கபூ­ரி­யாவும் வக்பு சொத்தும்

கொடை­வள்ளல் மர்ஹூம் என்.டீ.எச். அப்துல் கபூரின் முயற்­சி­யினால் 1931ஆம் ஆண்டு ‘மஹ­ர­கம கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி உரு­வாக்­கப்­பட்­டது. இக்­கல்­லூ­ரிக்­கென அப்துல் கபூர் தனது சொத்தில் 17.5 ஏக்கர் நிலம் ஒதுக்­கினார். அத்­தோடு இக்­கல்­லூ­ரியில் பயிலும் மாண­வர்­களின் கல்வி மேம்­பாட்­டுக்­காக அவர் கிரேண்ட்பாஸ் வீதியில் தனது 2.5 ஏக்கர் (சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த) காணியை வக்பு செய்தார். இக்­காணி மூலம் பெறப்­பட்டு வந்த வரு­மானம் கல்­லூரி செயற்­பா­டு­க­ளுக்­காக செல­வி­டப்­பட்டு வந்­தது.


என்­றாலும் 1995க்குப் பிற்­பட்ட காலத்தில் கல்­லூரி அதிபர் முபாரக் ஹஸ­ரத்­திற்கும் நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவில் ஏற்­பட்ட விரிசல் கார­ண­மாக நம்­பிக்­கை­யா­ளர்­களால் சுலைமான் வைத்­தி­ய­சாலை மூலம் பெறப்­பட்டு வந்த உதவித் தொகை எவ்­வித முன்­ன­றி­வித்­த­லு­மின்றி 2013 வரை நிறுத்­தப்­பட்­டது. கல்­லூ­ரியை மேலும் தர­மு­யர்த்தும் நோக்கில் நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுக்கும் முகா­மைத்­துவ சபைக்­கு­மி­டையில் 2018.05.09ஆம் திகதி புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­யொன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டாலும் ந ம்பிக்­கை­யாளர் சபை பின்பு எவ்­வித கார­ண­மு­மின்றி அவ்­வொப்­பந்­தத்தை ரத்துச் செய்­தது.


அத்­தோடு நம்­பிக்­கை­யா­ளர்­களில் ஒருவர் கபூ­ரிய்­யாவும், சொத்­து­களும் குடும்பச் சொத்து என அறி­வித்தார். கபூ­ரிய்­யா­வுக்கு சொந்­த­மான காணிகள் வக்பு செய்­யப்­ப­ட­வில்லை. அது எமது தனியார் உடமை, பழைய மாண­வர்கள் இதனை அத்­து­மீறி கைய­கப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர் எனவும் அவர் தெரி­வித்­த­துடன் பழைய மாண­வர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸில் முறைப்­பாடும் செய்­யப்­பட்­டது.


வக்பு நியாய சபையில் வழக்கு

கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி அதன் நம்­பிக்­கை­யாளர்­களால் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்­வ­தற்­காக பழைய மாணவர் சங்கம் வக்பு நியாய சபையில் வழக்கு தாக்கல் செய்­தது. சுலைமான் வைத்­தி­ய­சாலை காணி குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ரா­கவும் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது. இந்­நி­லையில் வக்பு நியாய சபை கல்­லூ­ரியை நிர்­வ­கிப்­ப­தற்கு 11 பேர் கொண்ட முகா­மைத்­துவ குழு­வொன்­றினை நிய­மித்­தது. இந்­நி­லையில் இவ்­வ­ழக்­கு­க­ளுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யாளர் சபை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­துள்­ளது. மனுவில் கபூ­ரிய்யா கல்­லூ­ரியும், சொத்­து­களும் தர்ம நம்­பிக்கை நிதி­யத்தின் கீழ் உள்­ள­டங்­காது. இது குடும்ப நம்பிக்கை நிதி­ய­மாகும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இத­னை­ய­டுத்து மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வக்பு நியாய சபை நிய­மித்த பழைய மாணவர் சங்க உறுப்­பி­னர்கள் அடங்­கிய 11 பேர் கொண்ட முகா­மைத்­துவ குழு­வுக்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு விதித்­துள்­ளது. இந்த இடைக்­கால தடை­யுத்­த­ர­வுக்கு எதி­ராக முகா­மைத்­துவ குழு உயர் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­துள்­ளது.


கவ­ன­யீர்ப்பு போராட்டம்

இவ்­வா­றான நிலையில் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளினால் அதிபர் ஒருவர் பத­வியில் இருக்­கின்ற நிலையில் புதிய அதிபர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிர்­வா­கத்­தினால் பல இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. விளை­யாட்டு மைதானம் பறிக்­கப்­பட்டுள்­ளது. நூலகம் மூடப்­பட்­டுள்­ளது. தொழிற் பயிற்சி நிலையம் , தகவல் தொழில் நுட்ப அறை மூடப்­பட்­டுள்­ளது.


இந்த கெடு­பி­டி­க­ளை­ய­டுத்தே கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கை­யி­னை­ய­டுத்து சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த காணிக்கு முன்னால் பழைய மாணவர் சங்­கத்­தி­னரின் ஏற்­பாட்டின் கீழ் கவ­ன­யீர்ப்புப் போராட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.


இப்­போ­ராட்­டத்தில் கல்­லூ­ரியின் மாண­வர்கள், பழைய மாண­வர்கள், அர­சி­யல்­வா­திகள், உல­மாக்கள், சட்­டத்­த­ர­ணிகள், புத்­தி­ஜீ­விகள், பொது­மக்கள் என பெருந்­தி­ர­ளானோர் பங்கு கொண்­டி­ருந்­தனர்.


போராட்­டக்­கா­ரர்கள், கபூ­ரிய்­யா­வையும் அதன் வளங்­க­ளையும் பாது­காப்போம், 90 ஆண்­டுகள் பழை­மை ­வாய்ந்த கபூ­ரிய்­யாவை பாது­காப்போம், வக்பு சொத்­துக்­களைப் பாது­காப்போம், மாண­வர்­களைத் துன்­பு­றுத்­தாதே, நெருப்பை உண்­ணாதே, வக்பு சொத்தை உண்­ணாதே என்ற வாச­கங்கள் பொருந்­திய பதா­தை­களை ஏந்­தி­யி­ருந்­தனர்.


மேல் ­மா­காண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி

கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் அசாத்­சாலி உரை­யாற்­று­கையில், ‘நாட்டு மக்­க­ளுக்கு கபூ­ரியா அரபுக் கல்­லூ­ரியின் இன்­றைய நிலை தெரி­யாது. மக்­க­ளுக்கு தெளிவு படுத்­து­வ­தற்­கா­கவே இந்த கவ­ன­யீர்ப்பு போராட்டம் நடை­பெ­று­கி­றது. கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரியில் 88 மாண­வர்கள் பயில்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு உணவு வழங்க முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. என்.டி.எச். கபூர் மஹ­ர­க­மயில் கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி அமைந்­தி­ருக்கும் இடத்தை 1931இல் கொள்­வ­னவு செய்தார். முழுக்­காணி 35 ஏக்­க­ரையும் 90 ஆயிரம் ரூபா­வுக்கே கொள்­வ­னவு செய்தார். இப்­போது கபூர் குடும்­பத்­தி­லி­ருந்து ஒருவர் வந்­துள்ளார். இன்று அவரது குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அன்று அவர் வக்பு செய்த சொத்­துக்கள் தேவைப்­பட்­டுள்­ளது.


காணியை துண்­டாடி விற்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். அதுதான் அவ­ருக்குத் தேவைப்­ப­டு­கி­றது. சொத்­து­களை துண்­டாடி விற்­பதே அவ­ரது இலக்கு. நாம் கேட்­கிறோம் கபூர் குடும்­பத்­தி­ன­ரிடம் இந்த சட்ட விரோத செயற்­பாட்­டுக்கு நீங்கள் அனை­வரும் இணக்­கமா? ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா? எல்­லோரும் ஒன்று சேர்ந்தா இந்த வக்பு சொத்தை சூறையா­டப்­போ­கி­றீர்கள்?


இந்­நாட்டில் கபூர் தனது பாரிய சொத்­து­களை மக்­க­ளுக்­காக தியாகம் செய்­தவர். 90 ஆயிரம் ரூபா­வுக்கு கபூ­ரிய்யா காணியை வாங்­கியது நாட்­டி­லுள்ள மாண­வர்­களை இங்கு அழைத்து வந்து கல்வி புகட்டி அவர்­களை நற்­பி­ர­ஜை­க­ளாக்க வேண்டும் என்­ப­தற்­காகும்.


இங்கு மாண­வர்­களும், அவர்­க­ளது பெற்­றோரும், புத்­தி­ஜீ­வி­களும் வந்­தி­ருக்­கி­றார்கள். மக்­க­ளுக்­காக வழங்­கப்­பட்ட பொது நிதிய சொத்­தி­னைப் ­பா­து­காப்­ப­தற்­கா­கவே இங்கு வந்­தி­ருக்­கி­றார்கள். இது தனிப்­பட்ட சொத்து என்று நிரூ­பிக்க ஒருவர் முயற்சிக்கி­றார். முஸ்லிம் சமூ­கத்தின் தலை­வர்கள் இது பற்றி சிந்­தி­யுங்கள். உட­ன­டி­யாக செயலில் இறங்கி இதனைப் பாது­கா­ருங்கள். இவ்­வாறு வக்பு சொத்­துக்­களை அப­க­ரிப்­ப­தற்­கா­கவே சிலர் முயற்­சித்து வரு­கி­றார்கள்.


இங்­குள்ள வறிய மக்­க­ளிடம் நீதி­மன்­றங்­களில் வழக்­கா­டு­வ­தற்கு கோடிக்­க­ணக்­கான பணம் இல்லை. கபூ­ரிய்யா நிர்­வா­கி­க­ளிடம் பணம் இருக்­கி­றது.


சுலைமான் வைத்­தி­ய­சாலை கட்­டி­டத்தை முதலில் நோலிமிட் ஹாஜி­யா­ருக்கு லீசிங் செய்­தார்கள். நோலிமிட் ஹாஜியார் அறிந்து கொண்டார். இதில் சட்ட விரோத செயல்கள் இடம் பெறு­கின்­றன என்று பின்பு இந்த திருட்டு வேலை­களில் நான் தொடர்­பு­பட விரும்­ப­வில்லை என்று கூறி லீசிங் எடுக்க அவர் தயா­ராக இருக்­க­வில்லை. 10.7 மில்­லியன் ரூபா முற்­ப­ண­மாக வழங்­கி­யி­ருந்தார். அந்தப் பணமும் வேண்­டா­மென அவர் கூறி­விட்டார். ஒப்­பந்­தத்­தையும் ரத்துச் செய்து கொண்டார்.


பின்பு ஒரே நாளில் கபூ­ரிய்யா ட்ரஸ்ட் ஆசியா ஜெம்ஸ், ஓடேல் பின்பு சொப்ட்­லொஜிக் என இச்­சொத்து மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஒரே நாளில் நான்கு லீசிங் ஒப்­பந்­தங்கள். இது சட்­ட­வி­ரோத செயல் இல்­லையா? அவர்­க­ளது செயற்­பா­டுகள் சரி­யா­னது என நிரூ­பிக்க 9 நீதி­மன்­றங்­க­ளுக்குச் சென்­றி­ருக்­கி­றார்கள். நீதி­மன்­றங்கள் மீது எமக்கு நம்­பிக்கை இருக்­கி­றது. நீதி நிலை­நாட்­டப்­படும் என்ற நம்­பிக்கை எமக்­குண்டு. இந்த கபூ­ரிய்யா ட்ரஸ்ட் தனியார் ட்ரஸ்ட் அல்ல. பொது ட்ரஸ்ட் ஆகும்.


வக்பு சொத்­தைத்தான் கபூரின் குடும்­பத்தில் ஒருவர் சூறை­யா­டு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறார்.


ட்ரஸ்ட்கள் மீது சில­ருக்கு ஆசை ஏற்­பட்­டுள்­ளது. பொது ட்ரஸ்ட்­களை தனியார் சொத்­துக்­க­ளாக மாற்­றிக்­கொள்ள முயற்­சிக்­கி­றார்கள். இதே நிலை­மைதான் மாகொல அநாதை இல்ல சொத்­து­க­ளுக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.


கபூ­ரிய்யா வக்பு சொத்து தொடர்பில் 9 வழக்­குகள் தற்­போது விசா­ர­ணையின் கீழ் உள்­ளன. உச்ச நீத­மன்றம் வரை வழக்கு உள்­ளது. வறிய மக்­க­ளிடம் நீதி­மன்­றங்­களில் வாதாட பணம் இல்லை. எனவே இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் உட­ன­டி­யாக இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யிட்டு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என மக்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்.


இந்த சட்ட விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருக்­கும்­நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என்­பதே மக்­களின் எதிர்­பார்ப்பு.

சுலைமான் வைத்­தி­ய­சாலை கபூ­ரிய்யா மாண­வர்­களின் கல்வி மேம்­பாட்­டுக்­கா­கவே வக்பு செய்­யப்­பட்­டது. இலங்கை வர­லாற்றில் முதன்­மு­றை­யாக கபூ­ரிய்யா நம்­பிக்கை பொறுப்­பாளர் சபையில் இரு பெண்கள் அங்கம் வகிக்­கி­றார்கள். கபூ­ரிய்யா மாண­வர்கள் தாக்­கப்­ப­டு­கி­றார்கள். பழைய அதிபர் தாக்­கப்­பட்­டுள்ளார். ஆனால் பொலிஸார் நிர்­வா­கத்­துக்கு சாத­க­மாக செயற்­ப­டு­கி­றார்கள்.மஹ­ர­கம பொலிஸார் உட­ன­டி­யாக இது தொடர்பில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பொலிஸ் திணைக்களத்திற்குப் பொறுப்­பான அமைச்சர் இவ்­வி­வ­கா­ரத்தில் உட­ன­டி­யாக தலை­யிட வேண்டும் என்றார்.


பழைய மாணவர் சங்க செய­லாளர் டில்சாட் மொஹமட்

கபூ­ரிய்யா பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் டில்சாட் மொஹமட் உரை­யாற்­று­கையில்,

கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி மாண­வர்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­ப­டு­கின்­றன. மாண­வர்­களின் பெற்­றோ­ரினால் இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.


நம்­பிக்கை பொறுப்­பாளர் அஸ்மத் கபூரின் வரு­கைக்குப் பின்னால் மாண­வர்­களின் விளை­யாட்டு மைதானம் பறிக்­கப்­பட்­டுள்­ளது. நீர்­வ­சதி கட்­ட­மைப்பு நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. மாண­வர்­களின் நூல் நிலையம் மூடப்­பட்­டுள்­ளது. தகவல் தொழி­னுட்ப அறை மூடப்­பட்­டுள்­ளது. தொழிற்­கல்வி நிலை­யமும் மூடப்­பட்­டுள்­ளது.


மாண­வர்­க­ளுக்கு க.பொ.த சா/த உயர்­தர கல்வி வழங்­கப்­ப­டு­வது சட்­டத்­துக்கு முர­ணா­னது என நம்­பிக்கைப் பொறுப்­பா­ளரில் ஒருவர் தெரி­விக்­கிறார்.


இவர் இக்­கல்­லூ­ரிக்கு வக்பு செய்­யப்­பட்ட சுலைமான் வைத்­தி­ய­சா­லையை சொப்ட்­லொஜிக் நிறு­வ­னத்­துக்கு 116 கோடி ரூபாய்­க­ளுக்கு குத்­த­கைக்கு கொடுத்­துள்ளார்.

ஆனால் இந்­நி­தியில் ஒரு சத­மேனும் கல்­லூரி கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­கு­வ­ழங்­கப்­ப­ட­வில்லை என்­பது கவ­லை­யா­ன­வி­ட­ய­மாகும். சுலைமான் வைத்­தி­ய­சாலை மூலம் கிடைக்கும் வரு­மா­னத்தில் ஒரு பங்கு கபூ­ரியா மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு செல­வி­டப்­பட வேண்டும் என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


இன்று கபூ­ரிய்யா காணியை விற்­ப­தற்­காக அக்­கா­ணி மதி­லிட்டு இரு பிரி­வாக பிரிக்­கப்­பட்­டுள்­ளது.


இதனால் 17 ½ ஏக்­கரில் நடை­பெற்று வந்த கல்­லூரி செயற்­பா­டுகள் தற்­போது 2 ½ ஏக்­க­ருக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.


முஸ்­லிம்­களே இது உங்கள் சொத்து. இச்­சொத்­தினைப் பாதுகாக்க நீங்கள் முன்வர வேண்டும். பழைய மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


கல்லூரி நம்பிக்கை பொறுப்பாளர்களில் சிலர் நாங்கள் வஹாபிகள், அடிப்படை வாதிகள், தீவிரவாதிகள், நாங்கள் ஸஹ்ரானுடைய ஆட்கள் என்று எங்கள் மீது மோசமான குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

91 வருடகால வரலாற்றினைக் கொண்ட கபூரிய்யாவின் எந்தவொரு மாணவனும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும், தீவிர வாதத்துக்கும் உள்ளாகவில்லை என்பதை நாங்கள் பெருமையுடன் கூறிக்கொள்கிறோம் என்றார்.– Vidivelli

No comments

Powered by Blogger.