Header Adsஎம்பாப்பே அடித்த 3 கோல்களும் இதயங்களை நொறுக்க, 36 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற அர்ஜென்டினா


36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா.


எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள்.


அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது.


ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே உள்ளது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது. அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது.


உலகத்திற்கே மகிழ்ச்சியளித்த ஒரு கால்பந்து கலைஞனின் உலகக்கோப்பை "இறுதிப்போட்டி"முழுவதும் அன்பால் நிரம்பியுள்ளது. இப்படியொரு அபாரமான போட்டியின் மூலம் கால்பந்து விளையாட்டு அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து அவருக்கு பிரியாவிடை அளிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.


இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கியக் காரணம் அவர்தான்.


2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார்.


முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் அர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், வெறும் தங்களுடைய தற்காப்பையும் மெஸ்ஸி, ஆல்வாரெஸின் தாக்குதலையுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள். அதற்கான பலனாக பிரான்ஸை திணறடித்தது, அவர்களுடைய தடுப்பாட்டமும் தாக்குதல் ஆட்டமுமே.


அர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது.


எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது.


ஒரேயொரு தனிமனித தவறால் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.


எம்பாப்பே ஏழாவது கோலுடன், கோல்டன் பூட் பெறுவதற்கான போட்டியில் முன்னிலைக்கு வந்துள்ளார்.


ஓர் அணி முதல் பாதியில் இருந்த அதே ஆக்ரோஷத்துடன் ஆடுவது சிரமம் தான். ஆனால், அர்ஜென்டினா இந்த முறை அதைச் செய்தது.


அர்ஜென்டினா செய்த சிறு தவறால், எம்பாப்பே பந்தை அவர்களுடைய எல்லைக்குள் கொண்டு சென்றார். ஆனால், அவர் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டார். அதில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பையும் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் தடுத்துவிட்டார்.


ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார்.


அர்ஜென்டினாவின் டி மரியாவின் ஆட்டம் ஓர் ஆச்சர்யம் தான். அவர் இடையே சில காலம் ஆடவில்லையே, அவரை ஏன் இப்போது இறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவருடைய ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போலவே தோன்றியது.


ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்கு பதிலாக தடுப்பாட்டக்காரரான அகுனா களமிறக்கப்பட்டார். 64 நிமிடங்களில் ஒரு வீரரால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் அணிக்காக செய்துகொடுத்து விட்டுச் சென்றார்.


பிரான்ஸின் ஆட்டம் அவ்வளவு திறன் மிக்கதாக இந்தத் தொடர் முழுவதுமே இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களை ஆடவே எதிரணி விடவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுதான் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார்.


23வது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி போட்ட மெஸ்ஸி கோல் மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரான்ஸைவிட முன்னிலை பெற்றது.


இறுதிப்போட்டி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே லியோனெல் மெஸ்ஸி, ஹூலியன் ஆல்வாரெஸ், டி மரியா மூவரும் உருவாக்கிய கோல் வாய்ப்பு, அர்ஜென்டினா ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், அவர்களுடைய ஆட்டம் எப்படியிருக்கப் போகிறது என்பதையும் காட்டியது. அதுமட்டுமின்றி, ஆல்வாரெஸின் பணி தாக்குதல் மட்டுமில்லை, பந்தை அர்ஜென்டினாவின் எல்லைக்குள் செல்லவிடாமல் பிரான்ஸின் பக்கமே தக்கவைக்க வேண்டிய பணியும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் இருந்தது.


மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் ஐந்து கோல்களை அடித்துள்ளதோடு, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மெஸ்ஸி, ஆல்வாரெஸ் இருவரும், ஒருவித தீவிர தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கோல் முயற்சியில், கிறிஸ்டியன் ரொமேரோவால் எதிரணியின் கோல் கீப்பரும் கேப்டனுமான ஹ்யூகோ லோரிஸ் சற்று தடுமாறினார். முதலுதவிக்குப் பிறகு மீண்டும் ஆடத் தொடங்கினார். ஆல்வாரெஸ் செய்த கோல் முயற்சிகளை தியோ ஹெர்னான்டெஸ் தடுத்துக் கொண்டிருந்தார். மொலினாவும் எம்பாப்பே செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் நிழல் போலத் தொடர்ந்தார்.


ஆட்டம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினாவின் வசமே 38 சதவீதத்திற்கும் மேல் பந்து இருந்தது. பிரான்ஸ் மிகக் குறைவாகவே பந்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது.


அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே


ஆட்டம் தொடங்கியதிலிருந்து முதல் 20 நிமிடங்களில் எம்பாப்பே தடுப்பாட்டத்திலும் சரி தாக்குதல் ஆட்டத்திலும் சரி அவ்வளவு வீரியமாகக் களமிறங்காமலே இருந்தார். அந்த நேரத்தில் 21வது நிமிடத்தில், அர்ஜென்டினாவுக்கு டி மரியா மூலமாக பெனால்டி கிடைத்தது. டி மரியா களத்தில் இறங்கியது முதல் இடதுபுறத்திலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் அனைத்தும் இதை நோக்கியே இருந்ததைப் போல் இருந்தது.


டி மரியா ஏற்படுத்திக் கொடுத்த பெனால்டி வாய்ப்பை, மெஸ்ஸி தவறவிடாமல் கோலாக்கினார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் அவர் 6 கோல்களை அடித்துள்ளார். கோல் கீப்பரை வேறுபுறம் திசை திருப்பி, மிகவும் கூலாக தனது மெஸ்ஸி ஸ்பெஷல் ஷாட்டை அடித்தார்.


அந்த நேரத்தில், ஒருவேளை மைதானத்திற்குள் மாரடோனா இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார் என்பது தான் முதலில் தோன்றியது. 2018ஆம் ஆண்டில் அவர் பெனால்டி ஷாட்டை மிஸ் செய்தபோது மாரடோனாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்திருக்கும் இந்த கோலை, மெஸ்ஸியை பொறுத்தவரை அவர் வானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.


டி மரியா அடித்த 2ஆம் கோல்

அர்ஜென்டினாவுக்கு இரண்டாவது கோல் 36வது நிமிடத்தில் கிடைத்தது. மெஸ்ஸி இடது காலில் அழகாக அடித்த ஒன் டச் பாஸை, மெக் ஆலிஸ்டர் பிரான்சின் எல்லைக்குள் கொண்டு சென்று, டி மரியாவுக்கு பாஸ் செய்தார். டி மரியா அந்த வாய்ப்பை கோலாக்கினார். கோபா அமெரிக்காவின் இறுதிப் போட்டியில் இதேபோல் டி மரியா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முறையும் அதேபோல், அர்ஜென்டினாவுக்காக இறுதிப் போட்டியில் அவரை இறக்கியதற்கு அவர் மிகப்பெரிய ஒன்றைச் சாத்தியமாக்கினார்.


மிகவும் திட்டமிடப்பட்ட கச்சிதமான கோல். ஒரு தோல்வியில் தொடங்கிய அர்ஜென்டினாவின் ஆட்டம், இறுதிப்போட்டியில் டி மரியாவின் இரண்டாவது கோல் வரை வந்து நின்றது.


அர்ஜென்டினாவின் தாக்குதலும் சரி மிட் ஃபீல்டும் சரி மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தது. ஆனால், வழக்கமாக மிகுந்த ஒருங்கிணைப்போடு இருக்கும் பிரான்ஸ் அணியின் திறமையான வெளிப்பாடு எங்கே சென்றது என்பதைப் போல் உள்ளது. டி மரியாவின் ஆட்டம் இன்று அணிக்கு மிகவும் உதவியது.


அர்ஜென்டினா வீரர்களைப் பார்த்தால், இறுதிப்போட்டி என்ற அழுத்தம் இருப்பதைப் போலவே தெரியவில்லை. அந்தளவுக்கு மிகவும் கூலாக விளையாடினார்கள்.


உப்பமெக்கானோ, மெஸ்ஸியை நிழல் போல் தொடர்ந்து அவர் காலுக்கு பந்து கிடைக்காமல் தடுக்கப் பலமுறை முயன்றாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. எம்பாப்பே ஒருபுறம் பெரியளவில் தடுக்கப்பட்டார். அர்ஜென்டினா அவரைக் கட்டம் கட்டி தடுத்திருந்தது. பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பெ செய்ய வேண்டியதை, அர்ஜென்டினா அணிக்காக டி மரியா செய்துகொண்டிருந்தார்.


பிரான்ஸ் அணி பந்தைத் தங்கள் வசம் கொண்டு வந்து, கிலியன் எம்பாப்பே கொண்டு செல்லும்போது, அவரிடமிருந்து, மெஸ்ஸி, டிபால், ஃபெர்னாண்டெஸ் மூவரும் மிகச் சாதாரணமாகப் பறித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து எம்பாப்பே ஒரு ஃபௌலும் செய்தார். அது நடந்த அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் டி மரியா கொண்டு சென்ற பந்தைப் பெற்று ஆல்வாரெஸ் கோல் வாய்ப்பை உருவாக்கிவிட்டார். முன்னிலையில் தாக்குதல் இடத்தில் மெஸ்ஸி, ஆல்வாரெஸ், டி மடியா மூவரையும் நிலைநிறுத்தியது, மிகச் சரியான முடிவாகவே தெரிந்தது.


இந்த இரு அணிகளுமே இதற்கு முன்பு தலா இரண்டு முறை ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றுள்ளன. அர்ஜென்டினா கடைசியாக 1986இல் உலகக்கோப்பையை வென்றது. அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கும் லியோனல் மெஸ்ஸி 1987இல் பிறந்தவர். 35 வயதுள்ள அவருக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டி. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் கத்தார் உலகக்கோப்பை 2022ல் கடந்துவந்த பாதை


இறுதிப்போட்டிக்கு முன்னர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.


கத்தாரில் நடக்கும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களிலேயே மிகவும் அதிகமான பொருட்செலவில் நடத்தப்படும் தொடர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.


பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. பிரான்ஸ் 2006, 1998, 2018 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடியுள்ளது. இதில் 1998 மற்றும் 2018இல் வென்றுள்ளது.


இதுவரை இரு அணிகள் மட்டுமே அடுத்தடுத்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளன. 1958 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணி கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதற்கு முன் 1934 மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை இத்தாலி வென்றது. இம்முறை பிரான்ஸ் வென்றால் இந்த சாதனையைச் செய்த மூன்றாம் அணி என்ற பெருமையை பெற்றிருக்கும்.

No comments

Powered by Blogger.