Header Ads



ஜனாதிபதி ரணிலுக்கு இளம் அரசியல்வாதியின் பதிலடி


நாட்டு மக்களின் நிலைப்பாட்டை இராணுவத்தை பயன்படுத்தி மிதித்துக்கொண்டிருப்பதன் மூலம் போராட்டம் மேலும் அதிகரிக்கும் எனவும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமாறும் கோரிக்கை விடுப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


தயவு செய்து நாட்டு மக்களின் நிலைப்பாட்டுக்கு செவிகொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அதனை இராணுவத்தை பயன்படுத்தி மிதித்துக்கொண்டிருக்க முடியாது. போராட்டத்திற்கான காரணத்திற்கு தீர்வை வழங்க வேண்டும். 


நாடாளுமன்றத்தில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத போதே போராட்டங்கள் வெடிக்கும். அப்படி ஏற்படும் போராட்டங்களை நிறுத்த முடியாது.


இராணுவத்தை பயன்படுத்த முடியும், லட்சணக்கானவர்கள் இறக்கலாம். அது எமது தேவையில்லை. நாடாளுமன்றத்தில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது தேவை.


அதற்கு பதிலாக இராணுவத்தை பயன்படுத்தி மிதித்துக்கொண்டிருக்கும் போதே போராட்டம் மேலும் அதிகரிக்கும். போராட்டத்தை நிறுத்த வேண்டுமாயின் ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் ஹர்சன ராஜகருண கூறியுள்ளார். tw

No comments

Powered by Blogger.