Header Ads



செவிடன் காதில் ஊதிய சங்கு


(அபூ அஸ்ஜத் )


எல்லா விடயங்களும் எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையாகுவதில்லை என்பதற்கொப்ப  இலங்கையில் முஸ்லிம் சமூகம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் எதிர்கொண்ட இன்னல்கள் மற்றும் அவமானங்கள் மட்டுமல்லாமல் சொத்துக்களின் இழப்புக்கள் ஏராளம்.எல்லாவற்றுக்கும் ஒரு நியாயாதிக்கம் இருக்கின்றது.அது எப்போதாவது அதன் உண்மை முகத்தை காட்டும் என்பதை இன்றைய பல மாற்றங்கள் எமக்கு பாடமாக கற்றுத்தருகின்றன.


2019 ஆம் ஆண்டு இலங்கையில்  மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பெயர் கொண்ட பயங்கரவாதிகளின் சிலரது தாக்குதல்களினால் முழு நாடும் பல இழப்புக்களை சந்தித்தமை மட்டுமல்லாது முஸ்லிம் தலைமைகள் மற்றும் இளைஞர்களும், அப்பாவிகளும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.


பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி கைதுகளும்,சொத்துக்களின் முடக்கல்களும் அப்பட்டமான முறையில் அன்றைய ஆட்சியாளர்களினால் பயன்படுத்தப்பட்டதை காணமுடிந்தமையினையும் இந்த நேரத்தில் சுடுடிக்காட்டுவாது பொருத்தமாகும்.

இப்படியாக கைது செய்யப்பட்டவர்களின் வரிசையில் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்திது தலைமையான றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விதம் இன்றும் உங்கள் மனதில் பதிவாக இருக்கும்.புனித ரமழான் மாதத்தின்  நடுநிசியில் உட்டுபுகுந்த புலனாய்வு துறையினர்.அவரை செய்து அழைத்து சென்றதுடன் மட்டுமல்லாமல் பல்வேறு தகவல்களை சமூகத்தின் மத்தியில் விதைத்தனர்.100க்கும் மேற்பட்ட நாட்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரித்தனர்.அதன் பிற்பாடு சிறைப்படுத்தினர்.


இலங்கை அரசியலில் முத்த அரசியல்வாதிகளான டி.பி.ஜாயா முதல்  தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை பார்க்கும் போது முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் எதிர்கொண்ட சவால்களும்,துன்பங்களும் வெறந்த அரசியல்வாதிகளும் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.


இவ்வாறு கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் சிறையில் அனுபவித்த துன்பங்களும்,இன்னல்களும் வேறு எந்நத கைதுகளுக்கும் வரக் கூடாது என்ற சிந்தனையினை அவர் விதைதே வந்துள்ளார்.தனது அநியாயமான கைதுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச பாராளுமன்றத்தின் பிரதி நிதிகளின் அமைப்பு கூட இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு பல முறை கொண்டுவந்ததை  சுட்டிக்காட்ட வேண்டும்.


தனது கைது அநியாயமானது என்ற செய்தியினை அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இருந்த போது றிசாத் பதியுதீன சுட்டிக்காட்டிய போதும்,அது செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காகவே இருந்தன.


அதே வேளை அன்றைய ஆளும் கட்சி உறுப்பினர்கள்,அமைச்சர்கள், றிசாத் பதியுதீனுக்கு எதிராக பேசிய வார்த்தைகள் இன்னும் பசுமரத்தாணி போல் பதிவாக இருக்கின்றது.இருந்த போதும் இறைவனை நம்பியவர்களை அவன் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்ற அடிப்படை கொள்கையில் அவரும்,அவரை விரும்பும் உறவுகளும் இருந்ததன் காரணமாக அவரது பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டின என்பைதையும் நாம் இந்த தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும்.


இப்படியான நிலையில் பிணையில் வெளிவந்த பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன்,நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றில் இடம் பெற்ற பயங்கரவாத்துக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்குக்கு ஆஜராகியிருந்தார்.இதன் போது சட்ட மா அதிபர் சார்பில் ஈஜரான சட்டத்தரணி றிசாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் இந்த விசாரணையினை நிறைவுபடுத்தலாம் என மன்றில் அறிவித்த போது,கொழும்பு கோட்டை நீதவான் திலின  கமகே அவரை மேற்படி வழக்கில் இருந்து முழுமையாக விடுவிப்பதாக அறிவித்தார்.


இதே போன்று இவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு தடையினையும் முற்றாக நீக்குவதாகவும் இதன் போது அவர் குறிப்பிட்டதாக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்  தெரிவித்தார்.சட்டம் சரியாக தனது கடமையினை செய்யும் என்பதற்கொப்பவும்,அநியாயம் செய்பவ்களை அதற்கான தண்டனைகளை அநுபவிப்பார்கள் என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.


 7 மாதங்கள் சிறையில் றிசாத் பதியுதீன் எம்.பி அனுபவித்த இன்னல்களுக்கு ஒரு போதும் எவராலும் எதனை கொடுக்க முடியாது.இந்த   தண்டனைகைளின் பின்னணியில் இருந்து இனவாத்தை எப்போதும் வைத்து அரசியல் செய்யலாம் என்ற நபடபாசையுடன் செயற்பட்ட கும்பல்களை இறைவன் துடைத்து எரிந்ததுடன்,அவர்களை சின்னாபின்னமாக்கியதையும் நாம் அரசியல் நீரோட்டத்தில் கண்டுவந்த உண்மையாகும்.


எது எப்படியாக இருந்தாலும்,mதான் வீழ்ந்தாலும் தனது சமூகம் வீழ்ந்து விடக் கூடாது அவர்களுக்கான நேர்மையான அரசியல் தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அவரது மன உறுதி தொடரந்துகொண்டே இருக்கின்றன.இடையில் வருபவர்கள் இடையிலேயே செல்லும் நிலையினையும் நாம் பார்க்கின்நோம்.


எத்தனையோ போலி குற்றச்சாட்டுக்களையும், கட்டுக்கதைகளையும்,அரசியல் கொண்த்தராத்து காரர்களின் ஊடுருவல்களும் எடுபட்டதில்லை.கட்சியின் உண்மையான போராளிகள் இந்த ஊடுருவல்களை நன்கு புரிந்து வைத்துள்ளதுடன்,சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிர்காலத்தில் முற்றுப் புள்ளி வைத்து முகவரி தெரியாமல் அவர்களை அரசியல் நிரொட்டத்தில் இருந்து அகற்றிவிடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை இன்று பார்க்க முடிகின்றது.

No comments

Powered by Blogger.