Header Ads



கோயிலில் சிலையை கொள்ளையிட்ட பெண் கூறிய விசித்திரக் காரணம்


கொத்மலை பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் இருந்த தெய்வச் சிலையை கொள்ளையிட்டு அதனை எடுத்துச் சென்ற பெண்ணொருவர் நேற்றிரவு யக்கல பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 42 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையை சேர்ந்த சிலர் மலையகத்திற்கு சுற்றுலாப் பயணம் சென்ற போது கொத்மலையில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்று வழிப்பட்டுள்ளனர்.


அப்போது இந்த பெண் தெய்வச் சிலையை கொள்ளையிட்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார். கோயிலில் இருந்த தெய்வச் சிலை காணாமல் போயிருப்பதை அவதானித்த கோயிலின் பூசகர் பாதுகாப்பு கெமராக்களை பரிசோதித்துள்ளார்.


அதில் பெண்ணொருவர் அதனை எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து பூசகர் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


கொத்மலை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் யக்கல பொலிஸார் தனியார் பேருந்து ஒன்றை சோதனையிட்டு, அதில் பயணித்த பெண்ணை, தெய்வச் சிலையுடன் கைது செய்துள்ளனர்.


அதீதமான பக்தி காரணமாக வீட்டில் வைத்து பூஜித்து வணங்க தெய்வச் சிலையை எடுத்து வந்ததாக பொலிஸார் நடத்திய விசாரணையின் போது பெண் கூறியுள்ளார். சம்பவம் குறித்து யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.