Header Adsஇஸ்லாமியருடனான எனது உறவு, பேராசிரியர் மௌனகுரு சுரந்த கண்ணீர்


சென்றவாரம்  மருதானையிலிருந்து  தௌபீக் என்பவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார், தன்னை  முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டார். 

"சேர்  எங்கள் நிலையத்தில்  உங்களுக்கும் முஸ்லிம் களுக்கு இடையிலான  உறவுகள் பற்றி  ஓர் உரை நிகழ்த்தலாமா"  எனக் கேட்டுகொண்டார்,

நீங்கள்  யார் உங்கள் நிலையம் பற்றிக் கூறுங்கள்  என்றேன், அவருடன் உரையாடியதில்  விபரங்கள் தெரிய  வந்தன, அவர்களின் நிலையத்தின் பெயர்  இலங்கை ஜமாஅத்தே   இஸ்லாமி.  1954  இல்  ஆரம்பித்து  கொழும்பில்  கடந்த  56   வருடங்களாக  இயங்கி  வருகிறார்கள்.

மிகப் பழமையான  ஓர்  அமைப்பு,  இலங்கையில் சமூகங்களுக்கிடையே  இன ஒற்றுமை யைக்  கட்டி எழுப்புவதும்   முக்கியமாகத்   தமிழருக்கும்  இஸ்லாமியருக்குமிடையே  புரிந்துணர்வை  ஏற்படுத்துவதும்  அவர்களது  நோக்குகளில் ஒன்று

  எனக்கு நினைவு தெரிந்த காலம் இருந்து  எனக்கு  இந்தப் புரிந்துணர்வும்  உறவும் உண்டு, 

காலம் எனக்கு  அளித்த  கொடை  அது

  1947  இல் எனது  4 ஆவது  வயது பராயத்தில் 

 நான்  முதன் முதலில்   சந்தித்த  முதல் இஸ்லாமிரான 

 அலங்காரமான  பல  நிற்ங்களுடைய   பூநொச்சி முனைப்  பாய்களைத் தனது  றலி  சைக்கிளின் பின்  கரியரில்   கட்டிகொண்டு   காத்தான்குடியிருந்து   எங்கள் ஊருக்குள்  பாய்  வியாபாரம்  செய்ய  வந்து

  எங்கள் வீட்டில் பாய்களை  வைத்து  விட்டுச் சில பாய்களுடன்   காலையில் கிராமத்துள் இறங்கி   விற்ற  பின்னர்

   மதியம்  திரும்பி எங்கள் வீட்டிற்கு  வந்து  எனது   அம்மாவின்  கையால்  கொடுக்கும்  மதிய உணவு உண்ட  பின்னர்    எங்கள் வீட்டுத்  திண்ணையில் கண்ணயர்ந்து  

மீன்டும் பின்னேரம்  ஊருக்குள்சென்று  பாய் விற்று 

மீண்டும்   பிற்பகல்  எம் வீடு  வந்து    என்  அம்மாவைப்  “புள்ள”    எனத் தங்கை   உரிமையோடு   கூப்பிட்டு  அவர் கொடுக்கும்  தேநீர்  அருந்தி   களைப்பு  நீக்கி

 காத்தான்குடிக்குச்  சைக்கிளில் மாலை   செல்லும்  கீறின் காக்கா  என எமது ஊரவரால்  அழைக்கப்பட்ட  கரீம் காக்கா  தொடக்க்ம் 

 1965  களில்   எனது 22  ஆவது  பராயத்தில் 

கவிஞராக  எனக்கு   அறிமுகமாகி  

 நண்பனாக  நெருங்கி 

 என் திருமணத்தில்   சாட்சிக்  கையொப்பம்  வைத்து

  எனது மகன் சித்தார்த்தனின் மாமாவாகி 

   அவனுக்கு  விளையாடும் தோழனாகி

   அவனைத் த்ன்   தன் மார்பிலும் தோழிலும் தூக்கி  வளர்த்து  

  அவனுக்கு   மிகுந்த  அன்பிற்குரிய   மாமாவாகி 

 என் இன்பத்திலும் துன்பத்திலும்  கூடப் பிறந்த  சகோதரனாக

  அருகில்  நிற்கும்   நண்பனும் பேராசிரியரும் எனக்கு  ஒரு  வயது இளைய தம்பியுமான 

  நுஃமான்  வரை  

மிக  மிக நெருக்கமான் இஸ்லாமிய  உறவுகள்  எனக்குண்டு

 1950ன் களின்  நடுப்பகுதியில்  எனது 11  ஆவது  வயதில்

வந்தாறுமூலை  மத்திய கல்லூரியில் விடுதியில்  6 வருடங்கள்

 ஒரே  டொமற்றியில் உறங்கி

  ஒரே  வகுப்பில்  பயின்று 

 ஒரே மைதானத்தில்  விளையாடி

  ஒரே கோப்பையில்   உணவு  உண்டு  

இஸ்லாமிய  மாணவரும்      தமிழ் மாணவரும்    அண்ணன் தம்பியரென    ஒன்றாக  வளர்ந்தோம் 

.

 பாடசாலைக்  காலத்தில்  இரு சாராரும் வேடமிட்டுக் கொண்டு  மேடையில் ஏறி  நடித்தோம். மகிழ்ந்தோம்  

ஒன்றாகக்  கால் பந்து   விளையாடினோம் 

வீட்டை விட்டு  வந்த  கவலை. 

  ஒன்றாக  அழுதோம்

. ஒன்றாகச்  சிரித்தோம்

 ஒருவர்  உணவையும்   உணர்வையும்  மற்றவருடன் பரிமாறிக்கொண்டோம் 

இஸ்லாம்-தமிழ் என்ற  அடையாளங்கள் அதிகம் அழுத்தம் பெறாத  காலங்கள்  அவை

இன வாதம்  எங்களை  ஒட்டமுடியாத   இரு பிளவாகக்  கூறுபோடாத     அற்புதமான   காலங்கள்  அவை

  1965 இன்  பின்னால்  எனது  24  ஆவது  வயதில்

 எனது  ஆசிரிய  வாழ்க்கைக் காலத்தில்  கல்முனை  சாஹிறாக்  கல்லூரியிலும்  

1975 இல் எனது 32  ஆவது  வயதில்  யாழ்ப்பாணம்  ஒஸ்மானியாக் கல்லூரியிலும்  கற்பிக்கும்  வாய்ப்புக் கிடைத்த போது  அப்பிள்ளைகள்  எல்லாம் என் பிள்ளைகளாயினர்

 இரு பாடசாலைகளிலும்  தினமும்   கேட்கும் சலவாத்தும் கிறாத்தும் 

 என் உடலிடம்  கொண்டன  

தமிழ் இலக்கியங்கள் போல இஸ்லாமிய இலக்கியங்களும்  என்னைக்கவர்ந்தன

.

குணங்குடி  மஸ்தான் எனக்கு இன்னொரு  சித்தராய்த் தோன்றினார்

2019 இல்  எனது   எனது  77  ஆவது  வயதில்   இலங்கை   நாட்டில் ஒர் பெரும் குண்டுவெடிப்பு ஏற்பட்டு இன நல்லுறவு   இலங்கையில் முற்றாகச் சீர்குலைந்த போது 

 சீவகன்   என்னை  ஏதாவது  எழுதும்படி   கேட்க   மட்டக்களப்பிலிருந்து  வெளி  வந்த   அவரது  “அரங்கம்” பத்திரிகையில் தொடராக எனக்கும் இஸ்லாமிய ருக்குமான   உறவுகள் பற்றி  

 15  நிஜக்கதைகள்  எழுதினேன்

இப்படியும்  ஒரு காலம்  இருந்தது _பேரனுக்கு  பாட்டன் கூறும் பழம் கதைகள்

 என்பது அதன் தலைப்பு

நான் மேலே கூறியனவும் அதற்குள்  அடக்கம்

இதனை தௌபீக் அறிந்திருந்தார்  

‘அவ் அனுபவங்களை எங்களுடன் பகிருங்கள் சேர்”

  எனக் கேட்டுக்கொண்டார்.

 இன்றைய இரு   இளம் தலைமுறையினரும்   அவற்றை  அறிய வேண்டும்  என்பது  அவரது  அவா

அவரே  கொழும்பில் நான் இருக்கும் இருப்பிடம்    வந்து  என்னை   அவர்களின்  இலங்கை  ஜ்மா அத்  இஸ்லாமி     நிலையத்திற்குச் சென்ற  வாரம்  தனது காரில்  அழைத்துச்சென்றார்  காரை ஓட்டிச்  சென்றவர்     தஸ்ரிப்

மருதானையில்  அமைந்திருந்த 

இலங்கை ஜமாஅத்தே   இஸ்லாமி  நிலையத்தை  அடைந்தோம்

தௌபீக் என்னை   முதலில்காரியாலயம் அழைத்துச்  சென்றார்

அந்த  அறையிலே   பரந்த மனதும் ஆழ்ந்த  அறிவும் அனுபவமும் மிக்க   மலர்ந்த முகத்தினரான  எம் எச்  எம்  ஹசனைச்    சந்தித்தேன். 

அவர்தேசியக்  கல்வி  நிறூவகத்தின்  செயற் திட்ட  அதிகாரியாக  இருந்து  ஓய்வு  பெற்றிருந்தார்

 அவரது  நரைத்த  தலை முடியும் 

 சிறிய  நரைத்த  குறுந்தாடியும்  

மலர்ந்த முகமும் 

அழகிய  புன்னகையுடனான  இனிய  பேச்சும் 

 என்னைவசீகரித்தன  

  முதல்  சந்திப்பாக இருவருக்கும் அது தெரியவில்லை.    இரண்டொரு  நிமிடங்களுக்குள் இருவரும்  மிக நெருங்கி  விட்டதை உணர்ந்தோம்,

 இந்த உறவு  எப்போதோ  இருந்து  வந்த  உறவு   என இருவரும்  உணர்ந்தோம்

மனம் திறந்தால்  உறவு  நெருங்கும்

உறவின்பம்  கிடைக்கும்

நான்  1966 களில்  கல்முனை  சாஹிறாக் கல்லூரியில்  நான்    ஆசிரியரானமை 

 அங்கு  எருக்கலம்பிட்டியைசேர்ந்த  அபூபக்கர்  அதிபராக இருந்தமை, 

அந்நேரம்  எஸ் எச்  எம் ஜமீல் உப  அதிபராக  இருந்தமை

  அச்சமயம்  அப்பாடசாலை இருந்த  நிலைமை 

அப்போது முதன் முதல்  அங்கு  கலைப்பிரிவில்ல்  பல்கலைக்கழக புகு  முக வகுப்புகள்  ஆரம்பிக்க  அபூப்க்கர் முயற்சி  எடுத்தமை

  ஆரம்பித்தமை

. அதில் நான் 

 தமிழும் 

இலங்கை  வரலாறும்கற்பிக்க

  ஜமீல்  அரசியலும்  ஐரோப்பிய  வரலாறும் கற்பித்தமை

  முதன் முதல்  அதிலிருந்து  மாணவர் தெரிவாகி  கொழம்பு களனிப் பல்கலைக்க்ழகம்  சென்றமை

  என  அப்பழைய  இனிய நாட்களை  விவரித்தேன்

அங்கு நடந்த  விளையாட்டுப் போட்டிகள்  நாடகங்கள்

  என  நான் கூறிய எனது  கல்முனை  சாஹிறாக்  கல்லூரி  அனுபவங்கள் அவருக்கு புதிய  தகவல்கள் 

    அப்படியா?  

 என  ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டி ருந்தார்

அவரது தேசிய கல்வி  நிறுவன  அனுபவங்கள் எனக்குப் புதுமையாகத் தெரிந்தன

  தான் நிறுவனத்தில்  வகித்த  பதவி  எடுத்த முயற்சிகள்  என்பன  பற்றி  அவர்  எனக்குரைத்தார்

அவரது  அனுபவங்கள்  எனக்குப் புதிய தகவல்கள்  

அப்படியா  என நான்  ஆச்சரியத்துடன் கேட்டுகொண்டிருந்தேன்

கூட்டம்  ஆரம்பமானது 

பின்னர் கூட்டம் நடகக் விருந்த  மண்டபத்திற்கு  அழைத்துச்  சென்றனர்

  எம் எச்  எம் ஹசனே  கூட்டத்திற்குத்   தலைமை தாங்கினார் 

 தௌபீக்  என்னைப்பற்றி ஓர்  விரிவான  அறிமுகம் செய்தார்

கூட்டத்திற்கு  21 பேர்    வந்திருந்தனர்,

பல் வேறு தரத்தினர்  

பல தொழில் புரிபவர் 

 மிக உயர்ந்த   அரச   பத்விகளில் இருப்பவர்கள் 

 இருந்து  ஓய்வு பெற்றவ்ர்கள்

  அனைவ்ரும்  ஆண்கள்  நடுத்தர  வயதினர்  அத்னைத் தாண்டிய  பலர்

நான் இஸ்லாமியருடனான   எனது உறவுகளை  இளம் வயது அனுபவங்களை   அவர்கள்  முன் விவரித்தேன்

இன்றைய இளம் தலைமுறை  நம்ப முடியாத  அனுபவஙகள் அவை

ஒருமணி  நேரக் கதை கூறல் அது

பலருக்கு அக்கதைகள் பெரு வியப்பளித்தமையை  அவர்களின் முக பாவங்களிலிருந்தும்  பேச்சு முடிய  நடந்த  கருத்துபரிமாறலிலிருந்தும்  அறிந்து கொண்டேன்  

ஏறத்தாள  8 கதைகள் கூறியிருப்பேன் என நம்புகிறேன்

இறுதிக்   கதையைக்  கூறிக்கொண்டிருக்கையில்  எனக்கு   தொண்டை  அடைத்து   கண்ணீர்  சுரந்து விம்மல்  ஏற்பட்டு விட்டது,

 அது ஓர் உணர்ச்சி பூர்வமான  கதை

"மன்னியுங்கள்  உணர்ச்சியில்  வார்த்தைகள்   இந்த  வயதிலும் தடைப்படுகின்றன" என்றேன்

அங்கிருந்த்  நடுத்தர வயதினரான  நௌசர் 

  “சேர் எங்களுக்கும் அதே விம்மல்  வருகிறது  அதே உணர்ச்சி  நிலையில்  நாங்களும்  இருக்கிறோம்”

 என்றார்  உணர்ச்சியுடன்

புரிந்துணர்வால் இருவருக்கும் ஏற்பட்ட உணர்ச்சி  அது

கலந்துரையாடலில்  அருமையான  கருத்துகள் பரிமாறப்பட்டன 

முக்கியமாகக்   கிழக்கில் பிரிந்து கிடக்கும் இவ்விரு இனங்களும் இணைய  வழி  எது ?   எப்போது  இவ்விரு  இனங்களும்  இணையும் என்பதே  எல்லோரதும்  வினா

“கம்பராயாணத்தை  எமது இலக்கியம்  என  இஸ்லாமிய  சமூகமும்  சீறாப்புராணத்தை  எங்களது இலக்கியம் எனத்  தமிழ்ச்  சமூகமும்   பண்பாட்டடிப் படையில் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் 

கிழக்குப் பல்கலைக்க்ழகம் ஓர் இஸ்லாமியரை  வேந்தராகவோ  அல்லது   உப வேந்தராகவோ   ஏற்றுக் கொள்ளவும் 

   தென் கிழக்குப் பல்கலைக்க்ழகம்  ஓர் தமிழரை  வேந்தராகவோ  அல்லது  உப வேந்தராகவோ   அறிவுலக   அடிப்படையில்   ஏற்றுகொள்ளவுமான  மனப் பக்குவமும்

  என்று   இரு இனத்தாரிடையேயும்  இதயபூர்வமாக  ஏற்படுகிறதோ

  அந்நாளே  நந்நாள் 

 அதனை நோக்கி  நம்பிக்கையுடன்  செயல் படுவதே  ஒரே வழி  எனக் கூறினேன்

நீங்கள் கூறிய  கருத்துகள்  எமது   இரு  இளம் தலை  முறையும்  அறிய  வேண்டிய  கருத்துகள்  என்றனர்

  அனைவ்ரும்    கொழும்பில் வாழும் இஸ்லாமியர்

“உங்களுக்கு  திறந்த இருதய  சிகிச்சை  செய்த  இருதய சிகிச்சை  நிபுணர்  டொக்டர் லாஹியின்  மனைவியின்  அண்ணன் நான்"    என்றார்  ஒருவர்

  அவரது  பெயர்  வைத்தியர்   ஹபீஸ்  என நினைக்கிறேன்

“நான் இப்போது  உயிரோடு இருப்பது  அவர் இட்ட  பிச்சை’   என  அவரை நோக்கி இரு  கை கூப்பினேன்

லாகிர் இப்போது இல்லை  எனனை உயிர்ப்பித்த  அவர்  மாரடைப்பால் சில வருடங்களுக்கு முன்னர்  காலமானார்

லாகிரின்  அமைதியான  தோற்றமும் அவர் நீண்ட நாள் உயிர் வாழ  எனக்களித்த்  ஆலோசனைகளும் மனதில்  வந்து போயின 

அவரைப் பற்றி நான்  என்  முகநூலில் நீண்டதோர்  கட்டுரை  எழுதியுள்ளேன்

“றவுப்  ஹக்கீமின் தமையனார்  அவர்  என  வைத்தியர் ஹஸீஸ்  காட்டிச் சொன்னாரள் அருகிலிருந்தோர்

  ஹக்கீம்  அவர்களின் முகசாயல்  அண்ணனாரின் முகத்தில்  தெரிந்தது  

 தான்  மாவனெல்லை  என்றார் ஒருவர்

தான்  அக்குறணை  என்றார் இன்னொருவர்

நான் மருதமுனை என்றார்  இன்னொருவர்

ஒருவரைக் காட்டி  இவர்   காத்தான்குடி  என்றனர்.

பலஊர்களையும் சேர்ந்த இஸ்லாமியர்கள் 

 இன நல்லுறவை இருதயத்தால்  வேண்டி ஏங்கும்  அழகிய  உள்ளங்கள்

பலர்   என்னுடன்  செல்பி  எடுத்துக்கொண்டனர்

மிகச்  செல்வாக்கான  பதவியில் இருக்கும் ஒருவர்  “

என்ன உதவியாயினும்  எனக்கு  போன் பண்ணுங்கள்  சேர்;  

என்று  வாஞ்சையுடன் கூறித்  தனது போன் நம்பரும்  தந்தார்

அவர்களின்  அன்பு மழையில்  நனைந்தேன்

‘எத்தனை வயது  சேர் உங்களுக்கு.?’  என்றனர்

‘அதிக  வயதில்லை அடுத்த  ஆண்டு  80  ஆகிறது’  என்று கூறிச்  சிரித்தேன்

அவ்ர்களும்  சிரித்தனர்

அந்த மகிழ்ச்சியோடு  அவர்களிடம் இருந்து  விடைபெற்றேன்

வரும் வழியில்  தௌபீக்  தமிழ்  முஸ்லிம் இன ஒற்றுமையை  ஏற்படுத்த  என்ன செயலாம் சேர்  எனக் கேட்டுக்கொண்டே  வந்தார்

இரு சாராரிடையேயும் 

 சந்தேகம் 

 காழ்ப்பு  

அவநம்பிக்கை

ஒருவருகொருவர் பயம் 

 என்பன  வேரோடி  இருக்கின்றன  அல்லது உருவாகப்பட்டிருக்கிறது அதற்கான  காரணங்களுமுண்டு

இவற்றை மீறி நாம் இன்று கூடி  மனதால் பேசினோமே  இப்படி பேசுவோர்களை     மூவினங்களிடையேயும் இனம்  காணுங்கள் அத்தகையோர் பலர் உள்ளனர், தத்தம்  அளவில்  அவர்கள் இயங்குகின்றனர்  அவர்களை இணையுங்கள்"

  என்றேன்

ஒருவர்    இருப்பை மற்றவர்  அறிதல

ஒருவர்  இருபை  மற்றவர்     புரிதல்

ஒருவரை   இருப்பை  மற்றவர்  ஏற்றுகொள்ளல்  அலல்து  சேர்த்துகொள்ளல்

அறிதல் புரிதல்  ஏற்றுக் கொள்ளல் அல்லது  சேர்த்துகொள்ளல்  அதுவே   இணைவதற்கான   வழி ‘இது  நான் பெற்ற  வாழ்வனுபவம்”

  எனக்கூறினேன்

எனது இருப்பிடம்  வந்தது  கார்

எனது இருப்பிடத்திற்கு  முன்னால்  இருந்தது துவாரகா 

என்ச்ப்பெயரிய  ஓர்  இந்தியன்  றெஸ்ர்ரூரன்ட்,

   வகை  வகையான  சுவையான   

வடைகள் 

  தோசைகள் 

இட்லிகள்

 போன்ற  மிகச்  சுவையான இந்திய உணவு வகைகளுக்கும் 

அருமையான் பில்டர் காப்பிக்கும் 

மிகவும் பெயர் போனது  அந்த  றெஸ்ரூரன்ட்

 தூர இடங்களிலிருந்து  அதனை நாடி வருவோர்  பலர்

என்னை வீடு வரை கொணர்ந்த தௌபீக்கையும்  அவருடன் வந்தவரையும்  அங்கு  அழைத்துசென்றேன்

அங்கு   அப்போது போட்டு இறக்கிய  சூடு  பறக்கும்  உழுந்து வடையைச்     சட்னி  சாம்பாருட்ன் தொட்டுண்டு      கடுமையான  பில்டர் காப்பியும் சுவைத்து  மகிழ்ந்து 

 “வித்தியாசமான  சுவை  எனினும்   எமக்கு  நன்கு பிடித்துகொண்டது    சேர்”

  எனக் கூறி  விடை பெற்றனர் இருவரும்

வீட்டுக்கு  வந்து  அன்று நடந்தவற்றை  என் மனைவி  சித்ரலேகாவிட்ம் ஒப்புவித்து  மகிழ்ந்தேன்

எல்லாவற்றையும்   என் மனைவி   கேட்டு மகிழ்ந்தாள்

, அவளுக்கு இஸ்லாமியத் தோழிமார் அதிகம்

கேட்டு மகிழ்ந்த  பின்   என்னிடம்  ஒரே  ஒரு  கேள்வி  கேட்டாள்

 “எத்தனை பெண்கள் கூட்டத்திற்கு  வந்திருந்தார்கள்? 

மௌனகுரு
No comments

Powered by Blogger.