Header Adsபோராட்டத்தின் எதிரொலியும், மனித நேயத்தின் ஓம்காரமும்


“இங்கே கேள் நிகோலாய், இனியும்; பொய் சொல்லாதே. கடந்த காலத்தில் நீங்கள் மக்களை பாதுகாக்கவில்லை. மக்களுக்கு துரோகமிழைத்தீர்கள். இதன் பின்னர், எங்களுக்கு நீங்கள் வேண்டாம். இந்நாட்டுக்கு கம்யூனிஸ்ட் ஆட்சி வேண்டாம். நீங்கள் ருமேனியாவின் ஜனாதிபதியாக இருக்க தகுதியற்றவர். நீங்கள் இந்நாட்டின் ஆட்சியாளரல்ல. ”பல வருடங்களாக போலியான கம்யூனிஸ்ட் ஆட்சியால் பாதிக்கப்பட்டு, சர்வாதிகாரத்துக்குள் சிக்கித் தவித்த ருமேனியா மக்கள், ஒரு நாள் வீதியில் இறங்கி இவ்வாறு கூச்சலிட்டனர். 


அந்நாள் தான் 1989  டிசம்பர் 22 ஆம் திகதியாகும். அந்த மக்கள் நிகோலோயாலயே வீதிக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது ரஷ்யாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்த்தப்பட்டிருந்தது. இருப்பினும், ருமேனியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி பலமாக இருப்பதை காட்ட வேண்டிய அவசியம் நிகோலோய்க்கு ஏற்பட்டது. அதற்காக நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டது. 80 ஆயிரம் ரோமானியர்கள் தலைநகருக்கு அழைக்கப்பட்டனர்.


ருமேனியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மிகவும் பலமானது. நாட்டின் ஆட்சியை விரைவில் கவிழ்க்க முடியாது. அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். ருமேனியாவின் சுதந்திரம், ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாக்க நான் எப்போதும் பாடுபடுவேன். "உங்கள் அனைவரின் சிறந்த எதிர்காலத்திற்காக நான் பாடுபடுவேன் என்று உறுதியளிக்கிறேன்." 

நிகோலாய் தன்னுடைய பேச்சை இவ்வாறு ஆரம்பித்தார். 


ஓரிரு நிமிடம் கடந்தது. அவர் எழுந்து நின்றவுடன் “ஊ”என்ற கூச்சல் ஆரம்பித்தது. சில வினாடிகளில் “ஊ”சத்தம் பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. முப்பது வினாடிகளுக்குப் பிறகு 80 ஆயிரம் மக்களும் இடைவிடாது “ஊ”எனக் கூச்சலிட்டனர். நிகோலாய்க்கு இந்த சத்தங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பல தசாப்தங்களாக தான் வளர்த்த மாபெரும் கனவுச் சொர்க்கம் தான் அழைத்து வந்த மக்கள் முன்னால் சிதைந்து போனது.  எதுவும் செய்ய முடியாது, தன்னுடைய மைக்ரோஃபோனை தொடர்ந்து சத்தமாக தட்ட வேண்டியேற்பட்டது. இதற்கிடையில், அவருடைய மனைவியான, துணைப் பிரதமராக இருந்த எலினா, "வாயை மூடுங்கள், வாயை மூடுங்கள்" என்று ஆவேசமாக கத்த ஆரம்பித்தார். ஆனால் வலிகளால் நிரம்பி வழியும் மக்களை அது மேலும் பலப்படுத்தியது. 


இதற்கிடையில், சியசென்கோ இராணுவத்தையும் பொலிஸாரையும் அழைத்து, மக்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகைத் தாக்குதலை நடத்தினார். அவற்றில் இராணுவ டாங்கிகளும் அடங்கும். தாக்குதல் தொடங்கியது. நான்கு பக்கமும் இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது. பெரும்பாலான இராணுவ வீரர்கள் மக்கள் குரலுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். எனினும், சில இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குல்களால் பெரும்பாலான மக்கள் காயமடைந்தனர். ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.


ஆனால், சிறிது நேரத்தில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இராணுவம் ஆயுதங்களை மறுபக்கம் திரும்பியது. மக்களுடன் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த இராணுவம் ஜனாதிபதியை கைது செய்தது.

‘ஊச்சத்தம்' மூலம் தொடங்கிய போராட்டம் இறுதியில் பெரும் வெற்றியாகவும் பெரும் சோகமாகவும் மாறியது. வழக்கு விசாரணைக்கு பின்னர் 1989 டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில், இந்த தம்பதியினரை உடனடியாக சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதுபோன்ற பல சம்பவங்கள், வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் உதாரணங்கள் உள்ளன.

மக்கள் போராட்டம் என்பது, ஆயுதமேந்திய இரத்தம் தோய்ந்த படுகொலைகளை விட, நாகரீகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் தற்போதைய போராட்டங்கள் மாறியுள்ளன. இதற்கு மிக அண்மைய உதாரணமாக இலங்கையை அடையாளப்படுத்த முடியும்.

சர்வாதிகாரம் என்பது, இன்று உலகத்திலிருந்து வேகமாக அழிந்து  செல்லும் அரசாங்கத்தின் ஒரு வடிவமாகும். வளர்ச்சியடைந்த பிரஜைகள் தங்கள் இறையாண்மை அதிகாரத்தை முன்பை விட அதிகமாக பயன்படுத்துகின்றனர்.


அதிகாரங்களைப் பிரிப்பது என்பது பிரெஞ்சு அரசியல் நிபுணரான, பரோன் டி மொன்டெஸ்கியின் கருத்துபடி, ஜனநாயக நாட்டுக்கு எடுக்கக்கூடிய ஒரு முன்மாதிரியாகும். அதிகாரப் பிரிவினையினை முன்வைப்பவர்கள், இது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றது என்றும் சர்வாதிகாரிகள் அதிகாரத்திற்கு மாறுவதையும் தடுக்கின்றது என்றும் நம்புகிறார்கள்.ஆனால், பல ஆட்சியாளர்கள், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாகத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். உண்மையில் அதன் முடிவு ஒரு சோகமானது.  


மாக்கியெல்லியின் கூற்றுப்படி, அதிகாரப் போராட்டத்தில் மக்களிடையே எழும் பிரச்சினைகளைத் தீர்க்க இரண்டு வழிகள் உள்ளன. அதில் ஒன்று, சட்டப்படி பிரச்சனைகளை தீர்ப்பது. இரண்டாவது, அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பது. இவற்றில் முதலாவது முறை மக்களுக்கானது. இரண்டாவது முறை விலங்குகளுக்கு பொருத்தமானது. 

கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் இரண்டாவது வழியிலேயே பிரச்சினைகளை தீர்த்து வைத்தன.


அரச அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் மக்களைக் கட்டுப்படுத்தும் முறைகளை நாங்கள் ஒரு நாடாக, மிக ஆபத்தான முறையில் அனுபவித்து வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்டு, மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் இடையிலான உறவு துரதிஷ்டவசமாக தூரமாகிவிட்டுள்ளது.

பல சமயங்களில், மக்களால் நியமிக்கப்பட்டு தான் அனுப்பப்பட்ட, மக்கள் பிரதிநிதிகள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்து விட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் இவர்கள் தங்களுடைய மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து விட்டனர். இதனால், மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பல விடயங்கள் தொடர்பில் மக்கள் மௌனமாக இருந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு.ஆனால், தற்போது அது முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. புதிய ஊடக பாவனை மூலம் மக்களை மிக வேகமாக அறிவாற்றலுடன் ஒன்றிணைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே, அநீதிக்கு அசாதாரணத்திற்கு எதிராக முன்நிற்கும் வலிமை மக்களிடம் முன்னையதைவிடவும் வீரியமாக புகுந்துள்ளது. 


நம் நாட்டில் நடந்த மக்கள் போராட்டம் இன்றை விட எதிர்காலத்தில், வரலாற்று சரித்திரமாக பதிவு செய்யப்படும். இந்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் எதிர்காலத்தில் ஓர் அற்புதமான வரலாற்றுச் சான்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. எந்தவொரு மனிதப் போராட்டத்திலும் ஏற்படக்கூடிய குறைபாடுகள் அசாதாரணமானதல்ல, அதில் ஈடுபடும் எவரும் சம்பூர்ணமானவரகள் இல்லை என்பதோடு, மனிதர்களாக இருந்தாலும் தவறுகள் நடக்கலாம் என்பதே காரணம். ஆனால் இறுதி இலக்கு நாகரீகமாக இருந்தால், அதுவரை ஏற்படும் சிறு சிறு தவறுகள் காலத்தாலும் சமூக நீதியாலும் சரி செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.  


உலகின் மிகவும் வன்முறை மற்றும் இரத்தக்களரிப் போராட்டமாகக் கருதப்படும் பிரெஞ்சுப் புரட்சி, உலக பூராகவும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் நம்பிக்கைகளைத் தூண்டிய மனித உரிமைகள் தொடர்பாக, பிரகாசமான மற்றும் மிக முக்கியமான அடையாளங்களை உருவாக்கும் போராட்டமாக இன்றளவிலயே உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று, அதன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் மட்டுமே சுமத்தப்பட்டன. ஆனால் தற்போது அந்த புரட்சிகளின் இடம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஏப்ரல் 9 ஆம் திகதியான சனிக்கிழமை அன்று சமூக ஊடகங்கள் பிரசாரங்கள் ஊடாக காலிமுகத்திடலுக்கு வருகை தந்த, மக்களின் ஒத்துழைப்புடன் மக்கள் போராட்டம் தொடங்கியது. அது இந்நாட்டில் பலம் வாய்ந்த அரசாங்கம், பலம் வாய்ந்த ஜனாதிபதி மற்றும் பலம் வாய்ந்த பிரதரை வீட்டுக்கு அனுப்பும் அளவிற்கு பலமாக மாறியது. 


மக்கள் படும் கடும் துன்பங்களை கண்டுகொள்ளாத ஆட்சிக்கு எதிராகவே எதிர்ப்பை தெரிவித்தனர். மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காத கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்தனர். தலைத்தூக்கியுள்ள ஊழல், மோசடிகள் மற்றும் கொள்ளைகளால் நிறைந்துள்ள ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்கவே முன்னின்றனர். கொலைகள், காணாமலாக்கப்பட்டல், சித்திரவதைகள், அடக்குமுறைகள் போன்ற கொடூரமான நடவடிக்கைகளை கொண்டிருந்த ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே முன்வந்தனர். அதிகாரத்திற்காகவும் தமது இருப்புக்காகவும் சமூகத்தில் பிரிவினை, முரண்பாடு, வெறுப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய தவறான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே முன்னின்றனர். 

 

மக்கள் பங்களிப்பில்லாத இந்த பிரபுத்துவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே அவர்கள் கோரிக்கை விடுத்தனர். புதிய அரசியல் கலாசாரத்தையே கோரினர். பொறுப்புக்கூறல், மக்களுக்குப் பதிலளித்தல், சட்டவாட்சி, சமத்துவம் போன்ற விழுமியங்களைக் கொண்ட உண்மைத்தன்மையான ஜனநாயக ஆட்சியின் யுகத்தையே கோரினர். 

 

எனவே, இவ்வாறு பார்க்கும் போது இலங்கை மக்களின் போராட்டம், பெரும்பான்மையினரின் ஆசீர்வாதத்துடன் பலமமிக்கதாக மாறி, பண பலத்தையும் பிரபுக்களின் பலத்தையும் தோற்கடித்து, மக்களின் அபிலாஷைகளை பெற்றிக்கொண்ட போராட்டமாக, எதிர்காலத்தில் விசேட இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் Mp

2 comments:

  1. இதை அப்படியே சிங்களத்திலயும் கட்டுரையாக பிரபல பத்திரிகையில் பிரசுரித்தால் சிறப்பு

    ReplyDelete
  2. The role of Dr. T B Jayah becomes paramount at this moment to recollect, because had he, or the Muslim community, sided with the British at that time, granting of Independence to Ceylon would have been postponed. It is only because the minorities agreed that there was a United Front of Sinhalese, Tamils, Muslims asking for Independence. But one man was against it. That was G G Ponnambalam who tried to extract his pound of flesh. He said I will sign on the dotted line only if you agree to Fifty Fifty”. That is 50% of the seats for the Sinhalese and 50% for the minorities. Only if you agree to that, he told D S Senanayake, will I support the call for independence. Thereby T.B.Jayah totally undercut G G Ponnambalam’s fifty fifty” cry. That was the death knell of Fifty Fifty”. If Jayah joined the fifty fifty” cry at that time, Independence would have been postponed. One has to remember that even the word Sinhala was erased from the political lexicon. S W R D Bandaranaike ditched the idea of the Sinhala Maha Saba and he first joined the UNP and later set up the Sri Lanka Freedom Party which too did not have racial connotations. Everybody felt that communal parties were counter-productive. It is time up that a NEW POLITICAL FORCE” that will be honest and sincere that will produce CLEAN” and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH has to RISE”, and this NEW POLITICAL FORCE” has to support the new government formed by President Ranil and PM Dinesh Gunawardena and the majority Sinhalese citizens for the next approximate 3 years, notwithstanding the fact that the Tamils of the North and East and the Upcountry Tamils and all minorities should be equally respected, politically, for a better Sri Lanka, God willing, Insha Allah.
    Muslims should decide to vote in support this government in parliament and the SLPP/SLFP Alliance wholeheartedly, and be part of the VICTORY OF THE SRI LANKANS in helping to maintain a 2/3 majority government by those who love our “MAATHRUBOOMIYA”, Insha Allah.
    Noor Nizam – Convener “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.