Header Ads



மகிந்த, பசில் மீதான பயணத்தடை நீடிக்கப்பட்டது


முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீதான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட்  2ஆம் திகதி வரை பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

கடந்த மே 9 ஆம் திகதி கோட்ட கோ கம மற்றும் மைனா கோ கம அமைதி போராட்டத்தளங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மே 12 ஆம் திகதி முன்னாள் பிரதமர் உட்பட 14 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையிலே தற்போதும் குறித்த பயண தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.