Header Ads



இரகசிய கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்


இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவில் அதானி குழுமத்திற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

காற்றாலை மின் திட்டம் நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கிறார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்குத் தெரிவித்ததாக,இலங்கை மின்சார சபையின் தலைவர் சி பெர்டினாண்டோ, நாடாளுமன்றக் குழு முன்னால் கூறிய மூன்று நாட்களுக்குப் பிறகு, 2022 ஜூன் 14 அன்று பதவி விலகினார்.

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் தொடர்பிலேயே இந்த கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தநிலையிலேயே இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவில் அதானி குழுமத்திற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.  

முன்னதாக பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி முன்னால் ஆரம்பித்த பேரணி, மின்சார சபைக்கு முன் வந்த பின்னர், அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. TW

No comments

Powered by Blogger.