Header Ads

சவூதியில் ஆர்வத்துடன் நோன்பு நோற்ற, முஸ்லிம் அல்லாதோரின் அனுபவங்கள்


-ஏ.ஆர்.ஏ.பரீல்-

சவூதி அரே­பி­யாவில் வாழும் முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் அல்­லா­த­வர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லா­னோரும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­கின்­றனர். அவர்கள் தங்­க­ளது முஸ்லிம் நண்­பர்கள், சிநே­கி­தர்­க­ளுடன் மேலும் நெருக்­க­மா­வ­தற்கு நோன்பு நோற்க வேண்டும் என்ற உணர்வு மேலீட்டால் இவ்­வாறு உந்­தப்­ப­டு­கின்­றனர்.

“நீங்­க­ளா­கவே நோன்பு நோற்­கா­விட்­டாலும் நோன்­பினை பகிர்ந்து கொள்­ளுங்கள். நீங்கள் நோன்பின் சிநே­கி­தத்­தையும், தாராள உணர்­வி­னையும் பகிர்ந்து கொள்­வதன் மூலம் உணர்­வீர்கள்” என்­கிறார் ரபெல் ஜயகர். இவர் ஒரு முஸ்லிம் அல்லர். உரி­மை­க­ளுக்­கான கூட்­ட­ணியின் ரியாத் கிளையின் தலை­வ­ராக விளங்­கு­கிறார்.

“இந்த அழ­கிய அனு­ப­வத்தின் ஒரு பங்­கா­ளி­யாக இருப்பதாக நான் உணர்­கிறேன். ரமழான் மாதத்தில் இந்த உணர்வு மேலி­டு­கி­றது. சவூதி மற்றும் பிரான்ஸ் கலா­சா­ரங்­க­ளுக்­கி­டையில் ஓர் இணைப்பை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றேன்”­எ­னவும் அவர் தெரி­விக்­கிறார்.

ரபெல் ஜயகர் ரியாதில் கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக வாழ்ந்து வரு­கிறார். ஆனால் இவ்­வ­ரு­டமே முதல் தட­வை­யாக தான் நோன்பு நோற்­ற­தா­கவும் அவர் கூறு­கிறார்.

“நான் சவூதி அரே­பி­யா­வுக்கு வந்து முத­லா­வது வரு­டத்தில் அதி­க­மா­ன­வர்­க­ளோடு பழகும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை. அத­னை­ய­டுத்து கொவிட் 19 வைரஸ் தொற்று சவூ­தியில் பர­வி­யது. அதன் பின்பு தான் அதி­க­மான சவூதி நண்­பர்­களை தேடிக்­கொண்டேன். அவர்­க­ளுடன் பல­மான நட்­பு­ற­வு­களை வளர்த்துக் கொண்டேன்.

நோன்பின் ஆரம்­பத்தில் எனது நண்­பர்கள் இப்தார் வைப­வத்தில் கலந்து கொள்­ளு­மாறு அழைப்பு விடுத்­தார்கள்.

அழைப்பு விடுத்த எனது நண்­பர்­க­ளுடன் எனது அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொள்ள விரும்­பினேன். ஆன்­மீக மற்றும் சரீர சவால்­களை இப்­தாரில் கலந்து கொண்டு ஏற்றுக் கொண்டேன்.

ரம­ழானின் முதல் தினம் நான் ஸ்குவாஸ் விளை­யாட்டில் ஈடு­பட்ட சந்­தர்ப்­பத்தில் அதி­க­மாக தாக­மாக இருந்­தது. அது முதல் தடவை. மிகவும் சவா­லான அனு­பவம். தண்ணீர் அருந்­தா­ம­லி­ருப்­பது கஷ்­ட­மாக இருந்­தது. நான் இவ்­வாறு தண்ணீர் அருந்­தா­ம­லி­ருந்­தது குறித்து பெரு­மைப்­ப­டு­கிறேன் என்றார் அவர்.

நோன்பு நோற்­றுக்­கொண்டு உடற்­ப­யிற்சி நிலை­யத்­துக்கு செல்­வதன் மூலம் தனிப்­பட்ட இலக்­கு­களை வெற்றிக் கொள்ள அவரால் முடிந்­தது. இவ்­வ­கை­யான சிறிய வெற்­றி­களை ரம­ழானில் ஒவ்­வொரு நாளும் அடைந்து கொள்ள முடிந்­தது. பெரும் எண்­ணிக்­கை­யான மக்­க­ளுடன் ஒற்­று­மை­யாக கட்­டுப்­பாட்­டுடன் எம்மால் ஒன்­று­பட முடி­கி­றது.

ரமழான் புனி­த­மான ஓர் ஆன்­மீக பயிற்சி மட்­டு­மல்ல, எமக்கு பல வழி­க­ளிலும் சுகா­தார மற்றும் உடல்­நல நன்­மை­களைத் தரு­கி­றது. சூரிய உத­யத்­தி­லி­ருந்து சூரியன் மறையும் வரை நோன்­பி­ருப்­பது எமக்கு உடல் ஆரோக்­கி­யத்தை தருகி­றது என்று ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

நோன்பு காலத்தில் நாம் குறை­வாக உண்­பதால் எமது வயிறு மற்றும் சீரண தொகுதி சுருங்­கு­வ­தற்­கான வாய்ப்பு கிடைக்­கி­றது. இதனால் நேர­டி­யாக பசி கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­ப­டு­கி­றது. எமது உடல் நிறை­யிலும் குறைவு ஏற்­ப­டு­கி­றது.

ஒரு குறிப்­பிட்ட நேரம் உண்­ணா­மலும் அருந்­தா­மலும் இருப்­பதன் மூலம் எமது உடலின் கொழுப்­பினைக் குறைக்க முடி­வ­துடன் உடல் நலத்தைப் பேண முடி­கி­றது என்­பது ஆராய்ச்­சிகள் மூலம் அறி­யப்­பட்­டுள்­ளது.

ஒரு மாத கால நீண்ட நோன்­பி­ருப்­ப­தனால் எமது உடலில் படிப்­ப­டி­யாகப் பெரும் வியா­திக்­கி­ரு­மிகள் வெளி­யிடும் விஷத்­தினை சுத்தம் செய்­து­கொள்ள முடி­கி­றது.

அத்­தோடு எமது மன நிலைக்கும் சில நன்­மைகள் கிடைக்­கின்­றன. நோன்­பி­ருப்­ப­தனால் எமது மூளையும் அதிக நன்­மை­களைப் பெறு­கி­றது.

அத்­தோடு இரத்­தத்தில் சீனியின் அள­வினை கட்­டுப்­ப­டுத்­து­கி­றது. இன்­சுலின் மற்றும் சீனியின் அள­வினைக் கட்­டுப்­ப­டுத்தும் மருந்­துகள் எடுப்­ப­வர்கள் நோன்பு நோற்­பது தொடர்பில் முதலில் வைத்­திய ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­ள­வேண்டும்.

மரியா ரோஸ் – ஐக்­கிய அமெ­ரிக்கா

ஐக்­கிய அமெ­ரிக்கா கிளவ் லேன்ட்டைச் சேர்ந்த 21 வய­தான மரியா ரோஸ். முஸ்லிம் அல்­லா­த­வர்கள் நோன்பு நோற்­பது தொடர்பில் தனது அனு­ப­வங்­களை பின்­வ­ரு­மாறு பகிர்ந்து கொண்டார்.

“நான் எனது முத­லா­வது சர்­வ­தேச பய­ணத்தை துருக்கி நாட்­டுக்கு மேற்­கொண்­ட­போது நோன்பு நோற்­பதை ஆரம்­பித்தேன். மிகவும் நெருங்­கிய நண்­பி­யு­டனே நான் எனது பய­ணத்தை ஆரம்­பித்தேன். நாமி­ரு­வரும் நோன்பு நோற்­ப­தற்குத் தீர்­மா­னித்தோம். துருக்கி நாட்­ட­வர்கள் நோன்பு நோற்­பது போன்றே நாமும் நோன்­பினை நோற்றோம் என்றார் மரியா ரோஸ்.

ரோஸ் தனது முஸ்லிம் நாடு­க­ளுக்­கான பய­ணங்­களின் போது பல தட­வைகள் நோன்பு நோற்­றி­ருக்­கிறார். பல்­க­லைக்­க­ழ­கத்தில் பயின்ற காலத்­திலும் நோன்பு நோற்­றி­ருக்­கிறார். அங்கு அவ­ளது நண்­பர்­களில் அநேகர் வளை­குடா நாடு­களைச் சேர்ந்­த­வர்கள். சவூதி அரே­பியா, குவைத் மற்றும் ஓமானைச் சேர்ந்­த­வர்கள் அவர்கள்.

“நான் ரமழான் மாதத்தில் ஒவ்­வொரு தினத்­தையும் எனது நண்­பர்­க­ளு­டனே கழித்தேன். நாங்கள் எப்­போதும் ஒன்­றா­கவே இப்­தாரில் உண­வ­ருந்­தினோம். எமது விடு­தி­யி­லி­ருந்து வெளியில் சென்று சாப்­பி­டு­வதும் ஒன்­றா­கத்தான்.

ரோஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பயின்று கொண்­டி­ருந்­த­போது சவூதி பிர­ஜை­யொ­ரு­வரை திரு­மணம் செய்து கொண்டார். தற்­போது ஒவ்­வொரு வரு­டமும் அவர் ரம­ழானைக் கொண்­டா­டு­கிறார்.

ரமழான் விடு­முறை எனக்கு சாதா­ர­ண­மா­னது. அது எனக்கு அமெ­ரிக்­காவில் கிறிஸ்­மஸைப் போன்­றது. நான் கிறிஸ்மஸ் கொண்­டாட்­டத்தின் போது எல்­லோ­ருக்கும் பரி­சுகள் வாங்­குவேன். அது போன்­றதே ரம­ழானும் என்றார்.

அனா மெயி­லோவா – ஜோர்­ஜியா

ஜோர்­ஜி­யாவைச் சேர்ந்த அனா மெயி­லோவா பின்­வ­ரு­மாறு தனது நோன்பின் அனு­ப­வத்தை விப­ரித்தார். அவர் சவூதி அரே­பி­யா­வுக்­கான தனது முத­லா­வது விஜ­யத்தின் போது நோன்பு நோற்­றதை விப­ரித்தார்.

“நான் முதன்­மு­றை­யாக சவூதி அரே­பி­யாவில் கப்­ஜியில் எனது நண்பி ஹைபா மற்றும் அவ­ளது குடும்­பத்­துடன் ரம­ழானை கொண்­டா­டினேன். அவர்கள் இப்­போது எனது குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் போலாகி விட்­டார்கள்.

நான் ஹைபாவை ஜோர்­ஜி­யா­வி­லுள்ள பயண முகவர் நிறு­வனம் ஒன்­றிலே சந்­தித்தேன். நாங்கள் இரு­வரும் அந்த நிறு­வ­னத்தில் ஒன்­றாகப் பணி புரிந்தோம்” என்­கிறார் அனா மெயி­லோவா.

அந்த பயண முகவர் நிலை­யத்தின் உரி­மை­யாளர் ஹைபாவின் மாமி­யாவார். அவர் அனாவை தனது வீட்­டுக்கு வரு­மாறு அழைப்பு விடுத்தார். அன்று முதல் அவர்­க­ளது உறவு ஆரம்­ப­மா­னது.

தற்­போது வரை ரமழான் நோன்பு தொடர்­பான பயிற்­சி­களை ஒன்லைன் மூலமே பெற்று வந்தேன். பழ­கினேன். தற்­போது என்னால் ரமழான் நோன்­பினை முழு­மை­யாக நிறை­வேற்றிக் கொள்ள முடியும் என்­கிறாள் அனா.

அவள் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், “ஒவ்­வொரு நாளும் நான் எனது குடும்பம் மற்றும் நண்­பர்­களை வீடியோ கோல் மூலம் தொடர்பு கொள்­கிறேன். மிகவும் அழ­கான பல்­வேறு வகை­யான சுவை­யான உண­வு­களை அவர்­க­ளுக்கு காண்­பிக்­கிறேன். எனது குடும்பம் நண்­பர்கள் மற்றும் ஏனையோர் இங்கு வருகை தந்தால் இங்­குள்ள அனைத்து வகை­யான உண­வு­க­ளையும் ருசிக்க மறக்க வேண்டாம் என்­கிறார். பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் ரம­ழானில் தங்­க­ளது மத நம்­பிக்­கைகள் எவ்­வாறு இருந்­தாலும் சவூதி அரே­பி­யா­வுக்கு வருகை தரு­வார்கள் என்று அவர் எதிர்­பார்க்­கிறார்.

சூரியன் அஸ்­த­மிக்கும் போது மக்கள் நோன்பு திறக்­கி­றார்கள். நோன்பு திறக்கும் போது விரை­வாக உண­வ­ருந்­தாது மெது­வாக உண­வ­ருந்­து­மாறு சுகா­தார நிபு­ணர்கள் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்கள். உடல் போஷாக்­கினை உறிஞ்சிக் கொள்­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்க வேண்டும்.

ஜான் ஹாஸ் – ஜேர்­மனி

ஜேர்­மனைச் சேர்ந்த இராஜ தந்­தி­ரி­யான 34 வய­தான ஜான் ஹாஸ் தனது ரமழான் அனு­ப­வங்­களை இவ்­வாறு தெரி­விக்­கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜூலையில் ரியா­துக்கு வருகை தந்தார். அவர் தனது முத­லா­வது ரம­ழானை மினா பிராந்­தி­யத்தில் கழித்தார்.

“ஜேர்­மனி கெலோன் கிழக்கில் சிறு நக­ர­மொன்றில் நான் சிறு­வ­னாக இருந்த போது எனது கால்­பந்­தாட்ட குழுவில் முஸ்­லிம்­களை நான் நண்­பர்­க­ளாகக் கொண்­டி­ருந்தேன். அதனால் எனது சிறு­வ­ய­தி­லேயே ரமழான் பற்றி அறிந்­தி­ருந்தேன். ஆனால் அப்­போது நான் நோன்பு நோற்­பதைப் பற்றி கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

இப்­போது நோன்பு நோற்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­ததால் அதன் மூலம் முஸ்­லிம்­களின் அனு­பவம், அவர்­க­ளது வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள முயன்றேன்” என்­கிறார் ஜான் ஹாஸ்.

முஸ்­லிம்­களின் நோன்பின் விதி­களை முழு­மை­யாக கடைப்­பி­டித்து அவர் நோன்பு நோற்க முயன்றார். ஆனால் அது­மிகக் கடி­ன­மா­னது என உணர்ந்தார்.

“நான் வழமை போன்று காலையில் கோப்பி குடிப்பேன். பின்பு வழ­மை­போன்று நோன்­பின்­போது தண்ணீர் அருந்­தினேன். ஆனால் சூரியன் அஸ்­த­மிக்கும் வரை எதுவும் சாப்­பிட மாட்டேன்” என்­கிறார் ஹாஸ்.

ரமழான் மாதத்தில் சவூதி அரே­பி­யாவில் உண­வ­கங்கள் அனைத்தும் மூடப்­பட்­டி­ருக்கும், இதனால் நோன்பு நோற்­பது இல­கு­வாகும் என்றும் அவர் தெரி­வித்தார்.

நான் அதிக நேரம் நண்­பர்­க­ளு­டனே செல­விட்டேன். அவர்­க­ளுடன் இணைந்தே நோன்பு திறப்­ப­தற்கும் பழகிக் கொண்டேன். இந்நிகழ்வு அற்புதமானது.

அத்தோடு அவர்கள் பல்வேறு மத நம்பிக்கைகளை கொண்டவர்கள். அநேகமான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவின் உள்நாட்டவர்களுடன் நட்புறவினைக் கட்டியெழுப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நட்புறவு கலாசாரங்களையும் பழக்கவழக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு காரணமாய் அமைந்துள்ளன.

சவூதி அரேபியாவின் மொத்த சனத்தொகை சுமார் 35 மில்லியன்களாகும். அங்கு சுமார் 9 மில்லியன் வெளிநாட்டு பணியாளர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் முஸ்லிம் அல்லாதவர்களாவர்.

சவூதி அரேபியாவில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

உணவகங்கள் சிற்றூண்டிச்சாலைகள் ரமழானில் நோன்பு நேரத்தில் மூடப்பட்டிருக்கும்.

நன்றி : அரப் நியூஸ் - Vidivelli

No comments

Powered by Blogger.