Header Ads



படிப்பறிவில்லாத அமைச்சர்கள் எமது நாட்டை இந்த நிலைக்கு தள்ளியுள்ளனர்


குற்றச்சாட்டு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு வருடம்தோறும் செலுத்தவேண்டிய அங்கத்துவ கட்டணத்தையும் செலுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார்.

 ஊடக சந்திப்பின்போது இதனைத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாத்திரமே இலங்கையின் நெருக்கடி நிலைமைக்கு காரணமெனக் கூறினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ''நாம் இந்த நாட்டை கையளிக்கும்போது 7900 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியுடன் கையளித்தோம். படிப்பறிவில்லாத அமைச்சர்கள், திருட்டுத்தனமாக கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் எமது நாட்டை இந்த நிலைக்கு தள்ளியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரிமை கட்டணமாக நாம் வருடம்தோறும் ஒரு குறிப்பிடட தொகையை செலுத்தவேண்டும். ஆனால் தற்போது அந்தக் கட்டணத்தைக்கூட செலுத்தமுடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளோம்.

வருடாந்தம் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்திற்கு செலுத்தவேண்டும். ஆனால் அந்த தொகையைக்கூட அரசாங்கத்தால் செலுத்த முடியவில்லை” என்றார். 

No comments

Powered by Blogger.