Header Ads



தூதரக சேவைகளுக்கு நேரத்தை ஒதுக்க, கட்டணத்தை அறவிட்டால் முறையிடுங்கள்


தூதரக சேவைகளுக்கு, நேரத்தை ஒதுக்குவதற்காக கட்டணத்தை அறவிடுபவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கைக்கான தூதரகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூதரக சேவைகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் அல்லது நிறுவனம் குறித்த நடவடிக்கைக்கு பணம் அறவிடுவார்களாயின், அவர்கள் தொடர்பான தகவல்களை slcg.milanShmfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.