Header Ads



பொலிஸ் மா அதிபர் பதவியை, ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது - ஞானசாரர்


நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்டம் வழங்க வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

கர்தினாலின் சில செயற்பாடுகளை பார்க்கும் போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராக செயற்படுவதாகவே தென்படுகிறது.

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஓர் சாதாரண விடயம் அல்ல, இந்த நாட்டில் விசாரணை நடாத்தப்படும் முறையொன்று உள்ளது.

கர்தினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை. கர்தினால் பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார்.

அவ்வாறானால் பொலிஸ் மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

4 comments:

  1. ஏன்டா உனக்கு அது தேவப்படுமே

    ReplyDelete
  2. பொலிஸ் மா அதிபராக அவர் ஞானசாரர் செயல் படுவது அவருக்கே தெரியாதோ..?

    ReplyDelete
  3. நாட்டின் சட்டத்தை அவனுடைய கையில் எடுத்துக் கொண்டு பேயாட்டம் ஆடும் இந்த இடியட் சாரையை யார் இனி அரசுக்கு வந்தாலும் 1000 வருடங்கள் சிறையில் அடைக்க வேணடும்.

    ReplyDelete
  4. ஆடு சாரையே விளையாடு சாரையே

    ReplyDelete

Powered by Blogger.