Header Ads



நாட்டில் தற்போது பல வைரஸ்க்கள் பரவி வருகின்றன


இலங்கையில் தற்போது கொரோனா வைரஸைத் தவிர மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்  எச்சரித்துள்ளது.

தற்போது நாட்டில் பல வைரஸ்கள் பரவி வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க  உறுப்பினர் டாக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

கொரோனாவுடன், அதேபோன்றதொரு வைரஸும் பரவி வருவதாகக் தெரிவித்த அவர்,  இன்னொருபுறம் டெங்குவும் அதிகரித்து வருகிறது என சுட்டிக்காட்டினார்.

புதிய வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரதூரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அவர் எச்சரித்தார்.


No comments

Powered by Blogger.