Header Ads



நான் ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக முன்னெடுக்கும் பணி, அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு சலுகை பெற்றுக்கொடுப்பதாகும்


கொழும்புக்கு பால் கிராமத்திற்கு வெல்லரிக்காய் போன்ற கருத்துக்கள் வரலாற்றில் சமூகமயப்படுவதற்கான பிரதான காரணம் ஒரு பகுதியை மாத்திரம் கேந்திரமாக கொண்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டமையாகும்.பூலோக ரீதியாக பாகங்களாக பிரித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அபிவிருத்தியின் பிரதிபலன் நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் சரி சமமாக பகிரப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பதன் காரணமாக ஒரு சிலர் தன்னை விமர்சிப்பதாகவும், மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் அவர்கள் துக்கத்துடன் இருப்பதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர்,அரசியல்வாதிகளும் பணம் படைத்தோர்களும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது தொடர்பில் எவரும் வாய்த்திறப்பதில்லை என்றும் கூறினார்.

முதலாளிமார்கள்,பணம்படைத்தோர் பற்றி மாத்திரமின்றி சூரையாடலுக்கு உள்ளாகும் மக்கள் தொடர்பில் ஆராயும் தனது பொறுப்பை ஒரு கைவிடமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று(25) நடந்த ஐக்கிய ஊழியர் சங்கத்தின் முதலாவது நிறைவாண்டு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பல வருடங்களாக பல துயரங்களுக்கு மத்தியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பலர் உள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தான் ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக முன்னெடுக்கும் பணியானது அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கபட்டவர்களுக்கு சலுகை பெற்றுக்கொடுப்பதாகும். 1994 ஆம் ஆண்டு முதல்  அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவருக்கும் சலுகை வழங்கியே தீருவேன் எனவும் அவர் உறுதியளித்தார்

1 comment:

  1. oh you are so great , this is the immediate need to the country that you will provide once you elected and definitely people will vote to elect you and will feel very very much comfortable in future.

    ReplyDelete

Powered by Blogger.