Header Ads



எனக்கு அமைச்சு பதவி கிடைக்காததினால் அது பற்றி யோசித்தே, மன அழுத்தம் ஏற்பட்டு அதற்காக தற்போது சிகிச்சை பெறுகிறேன் - கீதா Mp


அரசாங்கத்தில் தனக்கு அமைச்சு பதவி கிடைக்காதது காரணமாக அது பற்றி யோசித்தே மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் அதற்கான தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா சமன்மலி குமாரசிங்க(Geetha Samanmali Kumarasinghe) தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச  தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் தனக்கு ராஜாங்க அமைச்சர் பதவியை கூட வழங்காதது குறித்து கீதா, மிகவும் கவலையை வெளியிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த 53 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேருக்கு அமைச்சு பதவிகள் கிடைத்துள்ளதாகவும் தனக்கு மாத்திரம் அமைச்சு பதவி வழங்கப்படவில்லை எனவும் இது தனக்கு செய்த மிகப் பெரிய அநீதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கீதா குமாரசிங்கவின் வெளியிட்ட தனது மன வருத்தம் தொடர்பாக எவரும் பதிலளிக்கவில்லை என்பதுடன் கூட்டம் முடிவடைவதற்குள் கீதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபல சிங்கள திரைப்பட நடிகையான கீதா சமன்மலி குமாரசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.  

2 comments:

  1. She only knows how lucrative it is to become a cabinet minister.

    ReplyDelete
  2. அப்படியே வைத்தியசாலையிலிருந்து பெட்டியில் போட்டு கனத்தைக்கு அனுப்பினால் நாட்டு மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.