Header Ads



மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு


திருகோணமலை மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு அடி நீளமான மலைப்பாம்பொன்றினை பிரதேச மக்களினால்(30) அதிகாலை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் நீதவான் நீதிமன்ற பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் குறித்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

அப்பகுதியில் குறித்த மலைப்பாம்பு கடந்த இரண்டு நாட்களாக வந்து சென்றதை அப்பகுதியில் வசிப்போர் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

மலைப்பாம்பினை பிரதேச பொது மக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து பிடித்து வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், அப்பாம்பினை யால வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

-பாருக்-

No comments

Powered by Blogger.