Header Ads



"யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா"...? நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்). محمد رسول الله له கூறினார்கள் …


நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்). محمد رسول الله له கூறினார்கள் …
"யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா? என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கியவன் தத்தளிப்பது போல்,
கப்ரில் ஒரு மையித், தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பர்கள் (அல்லது பிள்ளைகள், அல்லது உறவினர்கள்,) ஆகியோரிடமிருந்து துஆவை (பிராத்தனையை) எதிர்பார்க்கின்றது.
அப்படி யாரேனும் செய்த ஏதேனும் ஒரு துஆ அந்த மையித்தைச் சென்றடைந்தால், அதை, துன்யா மற்றும் அதிலுள்ளவற்றை விட மிகப் பிரியமாக நினைக்கின்றது.
நிச்சயமாக, அல்லாஹ், உலக மக்களின் பிரார்த்தனை மூலம், கப்ரு வாசிகளுக்கு மலைகள் போன்று அருள்களைப் பொழிகின்றான்.
இறந்தவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேட்பது (பிழை பொறுக்கத் தேடுவது) உயிரோடிருப்பவர்கள் மரணித்தவர்களுக்கு வழங்குகின்ற சன்மானமாகும் (அன்பளிப்பாகும்)", என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலி பைஹகீ, 
ஹதீஸ் 7904, மிஷ்காத்,
ஹதீஸ் 2355, (பாடம் – பாபுல் இஸ்திஃபார்)


No comments

Powered by Blogger.