Header Ads



இலங்கையின் டொலர் கையிருப்பு திடீரென 3.1 பில்லியன்களாக உயர்ந்தது - அஜித் நிவாட் குதூகலம்


மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் அறிவித்தப்படி அதிகாரபூர்வமாக இந்த கையிருப்பை அடைய முடிந்திருப்பதாக அவர் தமது ட்வீட்டர் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த தொகையை 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் தொடர்ந்தும் நிலவி வந்த டொலர் பற்றாக்குறைக் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்க நிலை ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் விரைவில் டொலர் கையிருப்பு பெறுமதியை 3 பில்லியன் டொலர்களாக உயர்த்தப்போவதாகவும் அதனை எவ்வாறு உயர்த்துவது என்பதை கூறமுடியாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மத்தியில் இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் இலங்கை பொருளாதார உதவிகளை கோரியிருந்தது. அதேநேரம் பங்களாதேஷ் வங்கியில் இருந்து ஏற்கனவே பெற்ற 200 பில்லியன் டொலர்களை மீளச்செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. "விரைவில் டொலர் கையிருப்பு பெறுமதியை 3 பில்லியன் டொலர்களாக உயர்த்தப்போவதாகவும் அதனை எவ்வாறு உயர்த்துவது என்பதை கூறமுடியாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்."

    Why Not? Is he Fiddling the Books?

    ReplyDelete
  2. இதிலுள்ள படம் ஒரு பெரிய கள்ளன்.வாயைத் திறந்தால் பொய்யும் மோசடியும் தான் இவனுடைய யோசனை. பொருளாதார முன்னேற்றம் என்பது இவனுடைய கண்ணோட்டத்தில் இனியும் எங்கிருந்து பணத்தைச் சுரண்டலாம் என்பது பற்றிய ஆய்வுக்குத் தான் இவனுடைய பார்வையில் பொருளாதார முன்னேற்றம்.

    ReplyDelete

Powered by Blogger.