Header Ads



இலங்கைக் கடலில் தள்ளாடும் 2 எரிவாயு கப்பல்கள்


எரிவாயுவை ஏற்றிவந்த இரண்டு கப்பல்கள் இன்னமும் கெரவலப்பிட்டியவை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

எரிவாயு கையிருப்பில் இல்லாததால், ஒரு வாரமாக லிட்ரோ நிறுவனம் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவில்லை.

சந்தைக்கு வழமையாக விநியோகித்த எரிவாயுவில் 25 வீதத்திற்கும் குறைவாகவே Laugfs நிறுவனம் தற்போது விநியோகித்து வருகிறது.

எரிவாயு கசிவு உணர்திறனை தூண்டும் Mercaptan இரசாயன பதார்த்தம் தரமாக இன்மையால், பங்களாதேஷில் இருந்து வருகைதந்த EPIC BALTA கப்பலில் இருந்த 3,200 மெட்ரிக் தொன் LP கேஸை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்தது.

பின்னர் 2000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய PERIKLIS என்ற மற்றுமொரு கப்பல் கொழும்பை வந்தடைந்தது.

இந்த கப்பலில் உள்ள எரிவாயுவின் தரம் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

No comments

Powered by Blogger.