Header Ads



ஞானசாரர் தலைமையிலான செயலணியை கலைத்து விடுங்கள் - நாட்டின் ஐக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது - UNP

நாட்டின் ஐக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை ஜனாதிபதி கலைக்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஞானசார தேரர் தலைமையிலான செயலணி நாட்டின் ஐக்கியத்தை பலவீனப்படுத்தி அழிக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் குறித்து விவாதிக்கவேண்டும் அதன் பின்னர் நீதியமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் இது குறித்து ஆராய்வதற்கான குழுவை நியமிக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பிட்ட அமைச்சிற்கு பொறுப்பாக உள்ள அமைச்சரும் சட்டமா அதிபரும் தங்களது கருத்தினை தெரிவிப்பதற்கு செயலணியை நம்பியிருக்காமல் ஜனாதிபதியின் ஆலோசனையை பெறவேண்டும் என  ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட விடயத்தை அமைச்சரவையில் விவாதிக்காமல் நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் மேற்பார்வையிலிருந்து அகற்றுவதற்காகவே செயலணி நியமிக்கப்பட்டது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியின் நியமனம் அரசமைப்பிற்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளது. TL

1 comment:

Powered by Blogger.