Header Ads



திருமணத்திற்கு சம்மதம், ஆனால் ஒரு கண்டிஷன்...?


கண்ணூர் மாவட்டம், ஆயிப்புழ சேர்ந்த அப்துல் பஷீர் - றஹீமா தம்பதியர் மகள் ஃபஹீமா.

பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு முடித்த ஃபஹீமா தற்போது பெங்களூர் அஸீம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி..

ஃபஹீமாவுக்கும் மலப்புறம் கோட்டக்கல் எனுமிடத்தில் பர்ணிச்சர் கடை நடத்தி வரும் முகமது இர்ஷாத் என்பவருக்கும் நிக்காஹ் ஏற்பாடு பெற்றோர் முடிவு செய்தனர்..

ஃபஹீமாவும் பெற்றோர் பார்த்த இர்ஷாதை மணமுடிக்க சம்மதம் தெரிவித்ததோடு அவரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்..

நிக்காஹின் போது தங்க நகையை மஹராக வழங்க உத்தேசித்த இர்ஷாதிடம் நகைக்கு பகரமாக ரூபாயாக தரவேண்டும் என்றும், திருமண தினத்தில் சாதாரண உடை அணிய அனுமதிக்க வேண்டும் என்ற ஃபஹீமா வைத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டது..

இரண்டு தினங்கள் முன்பு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தனது கைப்பட தைத்த சாதாரண உடையில், மணமகளாக காட்சி தந்த ஃபஹீமா, ஆடம்பர உடைகளுக்கு மீதமான தொகையுடன் தனக்கு மஹராக கிடைத்த ரூபாயையும் சேர்த்து, வறுமை காரணமாக படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த வழங்கினார்...

விசால மனம் படைத்த தம்பதியர் வாழ்வில் சகல விதமான பறக்கத்தும் இறைவன் அருள்வானாக... 

Azheem

6 comments:

  1. Aameen. May Almighty Allah Bless their family life and all..

    ReplyDelete
  2. யாஅல்லாஹ் இந்த குடும்பத்துக்கு பரக்கத் செய்வானாக,அவரகளின் உள்ளத்தை இ்ன்னும் இன்னும் தாராளமாக உதவி செய்யும் மனதை அருளுவானாக.

    ReplyDelete
  3. الحمد لله அல்லாஹ் அவர்களுக்கு சந்தோஷமான ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வழங்குவானாக

    ReplyDelete
  4. AlHamdulliah What an exemplary couple May Allah Mighty bless them with Saliheen children and bless both the parents (Ameen).

    ReplyDelete
  5. Aameen Aameen ya Rabbal Aalameen 🤲🤲🤲

    ReplyDelete

Powered by Blogger.