Header Ads



பஹரேன் இளவரசருடன், ஜனாதிபதி கோட்டாபய கலந்துரையாடல்


வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாடு தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடினார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகின்ற COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் ஜனாதிபதி, செவ்வாய்க்கிழமை (02) மேற்கண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கை மற்றும் பஹரேன் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதிக்கும் பஹரேன் இளவரசரும் பிரதமருமான சல்மான் பீன் ஹமாட் கலீபாவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்குப் பதிலாக தொழில் திறன்களையுடைய இலங்கையர்களுக்கு பஹரேன் நாட்டில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில், வாரத்தில் நான்கு நாட்களுக்கு ஸ்ரீ லங்கன் விமானச் சேவை மேற்கொள்ளப்படுகிறது. அந்த விமானப் பயண எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளின் மேம்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதிக்கும் நேபாளப் பிரதமர் பகதூர் தெவ்பாவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரிஷியா ஸ்கொட்லாண்ட்க்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று, கிளாஸ்கோவின் மேர்சன்ட் மாளிகையில் இடம்பெற்றது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, ஜனாதிபதியிடம் பெட்ரிஷியா அம்மையார்  தெரிவித்தார்.

3 comments:

  1. பிச்ச்ய் போடுகிறவர்கலிடம்தஅன்
    பிச்சை கேட்க முடிஉம்

    ReplyDelete
  2. 80 மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட எந்த ஒரு நாட்டுத் தலைவரும் எங்கள் சனாதிபதியுடன் கதைப்பதற்கு தயாராக இல்லை. கடைசியாக சற்று ஓய்வு எடுக்க இருந்து கொண்ட பஹரைன் நாட்டுத் தலைவரைத் தொடர்ந்து சென்றபோது முடியாது என கூற தயங்கிய அவருடன் களைப்பில் சாய்ந்திருந்த பஹரைன் நாட்டுத் தலைவருக்கு இலங்கை உல்லாசப்பிரயாணம்,வர்த்தகம், இருநாட்டு உறவுகள் பற்றி பல்லவி பாடத் தொடங்கியபோது வாயைத்திறந்து அவர் கேட்பதுபோன்று நடித்தார். உலகத் தலைவர்கள் இலங்கை பற்றி நடந்து கொள்ளும் இந்த புறக்கணிப்பைப் பார்த்தாவது இலங்கை பாடம் கற்றுக் கொள்ளும் நிலையிலும் இல்லை. இன்றோ நாளையோ காலம் முடியும் வரை காத்து நிற்கும் கிழவனை வௌிநாட்டு அமைச்சர் எனப் பெயரிட்டு இழுத்துச் செல்வதால் இலங்கை ஒருபோதும் இழந்த உறவுகளை நிச்சியம் மீண்டும் பெற்றுக் கொள்ளாது.

    ReplyDelete
  3. 80 மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட எந்த ஒரு நாட்டுத் தலைவரும் எங்கள் சனாதிபதியுடன் கதைப்பதற்கு தயாராக இல்லை. கடைசியாக சற்று ஓய்வு எடுக்க இருந்து கொண்ட பஹரைன் நாட்டுத் தலைவரைத் தொடர்ந்து சென்றபோது முடியாது என கூற தயங்கிய அவருடன் களைப்பில் சாய்ந்திருந்த பஹரைன் நாட்டுத் தலைவருக்கு இலங்கை உல்லாசப்பிரயாணம்,வர்த்தகம், இருநாட்டு உறவுகள் பற்றி பல்லவி பாடத் தொடங்கியபோது வாயைத்திறந்து அவர் கேட்பதுபோன்று நடித்தார். உலகத் தலைவர்கள் இலங்கை பற்றி நடந்து கொள்ளும் இந்த புறக்கணிப்பைப் பார்த்தாவது இலங்கை பாடம் கற்றுக் கொள்ளும் நிலையிலும் இல்லை. இன்றோ நாளையோ காலம் முடியும் வரை காத்து நிற்கும் கிழவனை வௌிநாட்டு அமைச்சர் எனப் பெயரிட்டு இழுத்துச் செல்வதால் இலங்கை ஒருபோதும் இழந்த உறவுகளை நிச்சியம் மீண்டும் பெற்றுக் கொள்ளாது.

    ReplyDelete

Powered by Blogger.