Header Ads



இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் புதிய நடைமுறை


குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் எதிர்வரும் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் அவற்றின் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 200 பேருக்கு மிகாமல் திருமண வைபவங்களை நடத்த முடியும் என்றும் திறந்த வெளி எனின், 250 பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவகங்களில்  அவற்றின் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 100 பேர் உள்ளிருந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். திறந்த வெளியாயின் 150 பேர் அனுமதிக்கப்படுவர்.

பாடசாலைகளைத் திறப்பது கல்வி அமைச்சினாலும் பல்கலைக்கழகங்களைத் திறப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினாலும் தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், சாதாரண கொள்ளளவில் 50 சதவீதினரைக் கொண்டு பிரத்தியேக வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.