Header Ads



இலங்கை வரலாற்றில் 2 ஆவது பெண் OIC


பிரதான பெண் பரிசோதகர் காஞ்சனா சமரகோன், கம்பஹா - நால்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நாளை (10) கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என, பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

புதிய பொலிஸ் நிலையம், பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவி வகிப்பது இலங்கை பொலிஸ் வரலாற்றில்  இரண்டாவது முறையாகும்.

தலைமைப் பரிசோதகர் காஞ்சனா சமரகோன் கேகாலையில் ஹெம்மாதகமையில் பிறந்து கேகாலை பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றவர்.

1997 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸில் பெண் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்ட இவர், சிலாபம், வவுனியா, கம்பஹா, மீரிகம, நிட்டம்புவ, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றியுள்ளார்.

அவரது கணவர், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் தலைமைப் பொலிஸ் பரிசோதகராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 24 வருடங்களுக்கு முன்னர் (1997 ஆம் ஆண்டு) யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பத்மினி என்பவரே இலங்கையின் முதல் பெண் பொலிஸ் பொறுப்பதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.