பட்ஜட்டுக்கு ஆதரவா..? எதிர்ப்பா..?? கம்மன்பில வீட்டில் 11 கட்சிகள் மந்திராலோசனை
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதா - அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் நாளை -15- ஆலோசனை
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்11 சிறு கட்சிகள் நாளை 15ம் திகதி அமைச்சர் உதய கம்மன்பில வீட்டில் மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து ஆராயவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்ற தீர்மானமும் இக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. TL
நாடகத்தை தொடர்ந்தும் நடாந்தும் இந்த கும்பல்கள், இறுதியில் நாடகத்தின் பின் குப்பையில் வீசியெறியப்படும் குப்பைகளாக மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.இந்த கூட்டத்தின் இலக்கு வாசி கிடைத்தால் இந்தப்பக்கம் வாசி தவறினால் அந்தப்பக்கம். அவ்வளவுதான். பொய்யும் புரட்டும் இந்த கூட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்.
ReplyDelete