Header Ads



உள்ளாடை இறக்குமதியை தடை செய்தமையை, நாட்டு மக்கள் எதிர்க்கவில்லை - அமைச்சர் சந்திரசேன


இறக்குமதி செய்யப்படும் 623  அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத தொகை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பல பொருட்கள் காணப்பட்டாலும் ஆனால் எதிர் தரப்பினர் தங்களின் அரசியல் பிரசாரத்திற்காக உள்ளாடை யை மாத்திரம் தெரிவு செய்துள்ளார்கள் என காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, தெரிவித்தார்.

உள்ளாடை இறக்குமதி தடை செய்தமைக்கு நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது எதிர்தத்ரப்பினர் தங்களின் அரசியல் பிரசாரத்திற்காக உள்ளாடை விவகாரத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு மக்கள் தேர்தலின் போது தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

நல்லாட்சி அரசாங்கம் தேசிய உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.  வீட்டை சுத்தம் செய்யும் தும்புத்தடியை கூடி பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.

தேசிய பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழிப்பது ஐக்கிய தேசியக் கட்சி

தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான  எதிர்பார்ப்பாக காணப்பட்டது என்றார்.

 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட பல பொருள்கள்  தடை செய்யப்பட்டன.

இதனால் தேசிய உற்பத்தியாளர்கள்  உற்பத்தி துறையில் முன்னேற்றமடைந்தார்கள். எனவே,  தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சுகளையும் ஸ்தாபித்துள்ளார் என்றார்.

No comments

Powered by Blogger.