Header Ads



யாழ்ப்பாண மக்களுக்கு அரசாங்க அதிபரின் முக்கிய அறிவிப்பு


யாழ்ப்பாண மக்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். 

அதன்படி, பொதுமக்கள் அனைவரும் தமது இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை தாமதிக்காது அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

யாழ். மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மிக விரைவாகவும், அமைதியான முறையிலும் யாழ். மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் தமது இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை தாமதிக்காது அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பெற்று கோவிட் - 19 நோய் தொற்று தாக்கத்திலிருந்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதுள்ள இறப்பு நிலைமையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 60 வயதிற்கு மேற்பட்டோரில் இறப்பு எண்ணிக்கை மொத்தமாக 192 நபர்களாக (ஆண்கள் 113, பெண்கள் 79) காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக இதுவரையான அறிக்கைகளின்படி 70 வயதிற்கு மேற்பட்டோரில் இறப்பு எண்ணிக்கை மொத்தமாக 132 நபர்களாகவும் (ஆண்கள் 79, பெண்கள்53) காணப்படுகிறது.

எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் - 19 தொற்று ஏற்படக்கூடிய சூழ்நிலை அதிகமாக காணப்படுவதால், எவ்வித தயக்கமின்றி தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்கு சென்று அடுத்துவரும் நாட்களில் விரைவாக தமது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார். 

No comments

Powered by Blogger.