Header Ads



நியுசிலாந்தில் மிகவும் செலவுமிக்க நடவடிக்கை இலங்கையரை கண்காணித்ததாகும் - 5 வருடங்கள் அவரது நடத்தையை மாற்ற முயன்றோம்


நியுசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள லைன் பல்பொருள் அங்காடியில் தாக்குதல் எப்படி இடம்பெற்றுள்ளது என  பொலிஸ் ஆணையாளர் அன்று கோஸ்டர் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் அவர் வழமைக்கு மாறான விதத்தில் நடந்துகொள்ளவில்லை, வழமை போல புகையிரதத்தில்  பல்பொருள் அங்காடிக்கு சென்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடியில் டிரொலியை எடுத்துக்கொண்டு அவர் வழமைபோல பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார் பத்து நிமிடங்கள் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் அவர் தாக்குதலை ஆரம்பித்தார் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை அவர் அகற்றுவதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன, அவர் சுடப்பட்டதை தொடர்ந்து அந்த கத்தி அவருக்கு அருகில் மீட்கப்பட்டது, சம்பவம் நடந்த இடத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னர் வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை தெரிவிக்க முடியும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் தாக்குதல் இடம் பெற்று 60 முதல் 90 செகன்ட்களில் கண்காணிப்பு குழுவினர் சத்தங்களையும், மக்கள் தப்பியோடுவதையும் அவதானித்தனர் என்பதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நபர்தீவிரவாத கருத்துக்களை கொண்டிருந்தவர் என்பதை அறிந்து கடந்த ஐந்து வருடங்களில் அவருடன் பேசுவதற்கும் அவரது நடத்தையை மாற்றுவதற்கும் முயற்சி செய்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவும் முயன்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவரை 53 நாட்கள் தொடர்ச்சியாக கண்காணித்தோம்- இது நியுசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் செலவுமிக்க நடவடிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 பேர் அவரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என நியுசிலாந்து பிரதமர்  தெரிவித்துள்ளார்.

2016 இல் முகநூலில் பயங்கரவாதிகள் குறித்து அனுதாபத்துடன் கருத்து வெளியிட்டதை தொடர்ந்து  பொலிஸாரின் கவனம் அவரை நோக்கி திரும்பியுள்ளது.

அவர் முகநூலில் வன்முறைமிகுந்த யுத்த வீடியோக்களை வெளியிட்டுள்ளதுடன் வன்முறை தீவிரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்,இதனை தொடர்ந்து பொலிஸார் அவருடன் பேசியுள்ளனர்.

2017 இல் சிரியாவிற்கு செல்ல முயன்றவேளை அவர் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தார் அவர் தங்கியிருந்த தொடர்மாடியில் சோதனையிட்டவேளை இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த விடயங்கள் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2018 இல் அவர் விடுதலை செய்யப்பட்டார்,எனினும் பிணையில் விடுதலை செய்யப்பட்டவேளை கத்தியை கொள்வனவு செய்தமைக்காக அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

2018 இல் அவருக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான முயற்சிகளை நீதிமன்றம் நிராகரித்தது.

ஏற்கனவே மூன்று வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் ஐஏஸ் பிரச்சாரங்களிற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது,அவரை கண்காணிப்பில் இருக்கவேண்டிய தண்டனை விதிக்கப்பட்டது அவர் இணையத்தை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

அவர் தான் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளதாக கருதிய நபர் தாங்கள் அவரை பின்தொடர்வதை அந்த நபர் கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு குழுவினர் சற்று தொலைவிலேயே இருக்கவேண்டியிருந்தது என பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தான் கண்காணிக்கப்படுகின்றேன் என்பதை உணர்ந்திருந்தார்,அவர் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Thinakkural


No comments

Powered by Blogger.