Header Ads



3 கோடி தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன, 50 வீதமானோருக்கு ஏற்றம் - 6000 கோடி செலவு


இலங்கையின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19 ஆயிரத்து 413 பேரில், 50 வீதமானோருக்கு இதுவரையில் கொவிட் வைரஸுக்கு எதிரான இரண்டு தடுப்பூசி டோஸ்களும் ஏற்றப்பட்டிருப்பதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 

இதற்கமைவாக இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஒன்பது இலட்சத்து 68 ஆயிரத்து 195 ஆகும். இதில் 89 இலட்சத்து 73 ஆயிரத்து 670 பேருக்கு சைனாபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார். 

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி டோஸ் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 49 ஆயிரத்து 105, மொடர்னா தடுப்பூசி டோஸ் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 58 ஆயிரத்து 282, பைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 43 ஆயிரத்து 685 ஆகும். 

ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 453 என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார். 

மூன்று கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கென ஆறாயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை அரசாங்கம் செலவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.