Header Ads



இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக் கல் போலியானதல்ல - தங்க ஆபரண அதிகார சபை


இரத்தினபுரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக் கல் கொத்தணி போலியான ஒரு கல் அல்ல என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் திலத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அது மில்லியன் கணக்கான வருடங்களாக சேர்ந்த பெறுமதியான இரத்தினகல் கொத்தணி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல தசாப்தங்களாக தன்னால் சேர்த்து வைக்கப்பட்ட இரத்தினகல் தொடர்பான மற்றும் அனுபவத்தில் இது மிகப்பெரிய பெறுமதியான கல் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அதன் விலை தொடர்பில் அதன் உரிமையாளரே மதிப்பிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அதனை மதிப்பிடுவதற்கான எந்த உரிமையும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபைக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2000 மில்லியன் டொலர் பெறுமதியானதென அதன் உரிமையாளர் கமகேயினால் கூறப்பட்டுள்ளது. எனினும் அதன் தன்மை, வகை மற்றும் நிறை தொடர்பான அறிக்கை வெளியிடும் நடவடிக்கை மாத்திரமே தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.