Header Ads



கிழக்கில் 393 கொரோனா மரணங்கள், தடுப்பூசியைப் பெற்றவர்களை அலைந்து திரியாமல் வீட்டில் இருக்குமாறு அறிவுரை


- ஏ.எல்.றபாய்தீன்பாபு -

மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடுதலான எண்ணிக்கை நோயாளர்கள் 20204 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு 393 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தெளபீக் திருகோணமலை மாகாண சுகாதாரப் பணிமனையில் நடை பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்ததாவது

கிழக்கு மாகாணத்தில் 11 ஆம்திகதி வரை 837 கொவிட் 19 நோயாளர்களும் 3 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட சுகாதாரப் பிரிவுகளில் 227 பேரும் மட்டக்களப்பில் 347 பேரும் ஒரு மரணமும் , திருகோணமலை மாவட்டத்தில் 105 பேரும் 3 மரணங்களும் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 20204 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஏ.ஆர்.எம். தெளபீக் தெரிவித்தார் . 

நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால்  தடுப்பூசி  திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. எமது இலக்கு குறிப்பிட்ட வயதினர் சனத்தொகையில் 90 வீதமானவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கல்முனை சுகாதாரப் பிரிவில் 178743 பேருக்கான தடுப்பூசி 80 வீதமானவர்களுக்கும் மட்டக்களப்பில் 310280 பேருக்கு  71 வீதமும் அம்பாறையில் 75 வீதமும் வழங்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைப்பதற்கு  சில காலம் எடுக்கிறது 3, 4 வாரங்கள் செல்லலாம் . தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்பதற்காக கண்ட கண்ட இடங்களில் அலைந்து திரியாமல்  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீட்டில் இருக்க வேண்டும் என்றார்

No comments

Powered by Blogger.