Header Ads



நாளைமுதல் சதொசவில் 130 ரூபாய்க்கு சீனி


நுகர்வோருக்கு 130 க்கு ரூபாய்க்கு விற்பனை செய்யத் தேவையான பழுப்பு சீனி தொகை சதொசவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் நாளை முதல் இலங்கை சீனி நிறுவனத்தால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வாக்கும்புர தெரிவித்தார்.

நாட்டில் சீனி விலை அதிகரிப்பால் நுகர்வோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை போக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தொலைபேசியில் தெரிவித்தார்.  

செவனகல, பெலவத்த மற்றும் ஹிங்குரான சீனி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சீனி இலங்கை சீனி நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது. 

நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் சீனியை ரூ .130 க்கு வாங்க முடியும் என குறிப்பிட்டார்.

இலங்கை சீனி நிறுவனத்தின் சீனி இருப்பு குறைந்து விட்டால், அரசாங்கம் வழங்கும் வரிச் சலுகையின் கீழ் சீனியை இறக்குமதி செய்யவும், நாட்டில் இருக்கும் சீனி ஏகாதிபத்தியத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீனியின் இறக்குமதி வரியை  50 ரூபாயில் இலிருந்து அரசாங்கம் குறைத்தது என்றும் ஆனால் சந்தையில் சீனியின் விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. பொதுமக்களை புல்திண்ணும் எருமைகளாக மாற்றும் பாரிய திட்டத்தின் ஒரு கட்ட நாடகம் சீனி 130 வழங்குவது. 85 ரூபாவாக இருந்த சீனியை 210 ரூபாவுக்கு விற்கும் திட்டத்தை அமுல் நடாத்தி அதை 130 ருபாவுக்கு வழங்கும் நாடகம். இதையும நம்பும் மீஹரகாக்கள் இந்த நாட்டில் போதியளவு இருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.