Header Ads



மைத்தரி, ரணிலுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? கத்தோலிக்கர்கள் ஏமாற்றமென ஜனாதிபதிக்கு மல்கம் ரஞ்சித் தெரிவிப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமை குறித்து  கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள 20 பக்க கடிதத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள்- அதனை திட்டமிட்டவர்கள் -முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கைகளை எடுத்து அதனை தடுத்து நிறுத்தாமல் தங்கள் கடமைகளை வேண்டுமென்றே புறக்கணித்தவர்களை நீதியின் முன்நிறுத்தும்  விடயத்தில் அரச இயந்திரம் மிகவும் மெதுவாக செயற்படுவது குறித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதிக்கான கத்தோலிக்க குழு ஏமாற்றமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன்  தாமதப்படுத்துகி;ன்றனர் அல்லது அலட்சியம் செய்கின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பொறுப்பை நிறைவேற்ற தவறினார் என்பதற்காகவும், அவரது அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற தவறியது என்பதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கை எடு;க்கவில்லை,இந்த பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதறகு கடந்த ஐந்துமாதங்கள்  போதுமானவையாக இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து ஏன் நடவடிககைகள் எதனையும் எடுக்கவில்லை என கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.

4 comments:

  1. கர்த்தினால் அவர்கள் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்கு மிகவும் உச்சகட்டமான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.ஏனெனில் நியாயம் கேட்ட மக்களுக்கு சென்ற காலங்களில் கிடைத்த முடிவுகள் பாதகமாகவே இருந்தது.

    ReplyDelete
  2. கர்த்தினால் அவர்கள் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்கு மிகவும் உச்சகட்டமான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.ஏனெனில் நியாயம் கேட்ட மக்களுக்கு சென்ற காலங்களில் கிடைத்த முடிவுகள் பாதகமாகவே இருந்தது.

    ReplyDelete

Powered by Blogger.