Header Ads



தற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்


முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொடர்பான விசாரணைகள் திசைத்திருப்பப்படுவதாக ஹிசாலினியின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார். 

இன்று -22- ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார். தமது பிள்ளையை தொழிலுக்காகவே அங்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவரது உடல் சவப்பெட்டியிலேயே எமக்கு கிடைத்தது.  

பிள்ளைக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக காவற்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் இங்கு வந்து அவர்கள் எழுப்புகின்ற கேள்விகள் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

பிள்ளைக்கு இங்கு வைத்து என்ன ஆனது, பிள்ளை இங்கு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள். 

நாட்டின் முக்கிய இடத்தில் இருக்கின்றவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றால், நாட்டில் இவ்வாறு எத்தனை சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இடம்பெறுகின்றன? எமது பிள்ளைக்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தமாட்டேன் என்று எமது பிள்ளையின் உடல் மீது சபதம் எடுத்திருக்கிறேன் என்று ஹிசாலியின் தாயார் தெரிவித்தார்.

1 comment:

  1. யார் என்ன சொன்னாலும் இறை நீதி உங்களை கைவிடாதம்மா! நல்லுள்ளம் கொண்ட அனைத்து முஸ்லிம்களும் உங்களுடன் நிட்பார்கள்! உங்கள் பிரார்த்தனைகள் வீண்போகாது!!

    ReplyDelete

Powered by Blogger.