Header Ads



வீதியில் நின்றபடி அதிரடி காட்டிய Dr சுகுனன் - சிலர் மீது வழக்கும் பாய்ந்தது (படங்கள்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுனன் தலைமையிலான குழுவினர் இன்று(16) காலை முதல் பெரியநீலாவனை தொடக்கம் சாய்ந்தமருது வரையிலான பகுதியில் உள்ள பிரதான வீதிகளில் பயணம் செய்த வாகனங்களை பரிசோதனை செய்து உரிய அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தவர்களுக்கு பி.சி ஆர் பரிசோதனை செய்ததுடன் குறித்த சிலருக்கு வழக்கு பதிவும் செய்தார்

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று தீவீரமடைவதை தொடர்ந்து அதனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைகள் இனி தொடர்ந்தேர்ச்சையாக கல்முனை பிராந்தியம் முழுவதுமாக நடைபெறவுள்ளது. 

இத் திடீர் கண்காணிப்பு நடவடிக்கையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி உட்பட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டர்.(சர்ஜுன் லாபீர்) 



2 comments:

  1. 1st பொது சுகாதார ஊழியர்கள் தற்சமயம் அன்றாடம் தொழில் செய்யும் பொது மக்களிடம் லச்சமாக பொருட்களையும் பணத்தையும் பெறுகின்றனர் இதனை முதலில் சுகுனன் அவர்கள் அதிரடியாக நிறுத்துமாறு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. இராணும் டாக்டர்கள் இல்லை. ஜனநாயக உலகில் இலங்கையில்தான் இராணுவத்தின் கையில் கொரோனா நடவடிக்கைகள் தடுப்பு உள்ளது. கல்முனை தமிழ் முஸ்லிம் மக்களிடையே சென்சிற்றிவ்வான பகுதியென்பதால் வைத்தியர் சுகுணனால் கையாளமுடியுமா என்கிற அச்சம் இருந்தது. டாக்டர் சுகுணன் முஸ்லிம் தமிழ் மக்களை இணைத்து வெற்றிகரமாக செயல்படுவது கண்டு பெருமிதமாக இருக்கு. டாக்டர்கள் சுகுணன் மற்றும் ஏ.ஆர்.எம்,அஸ்மி அவர்களது கூட்டு கல்முனையில் வென்றுள்ளது. அவர்களுக்கு என் அன்பும் பாராட்டுகளும்.

    ReplyDelete

Powered by Blogger.