Header Ads



உடைந்த கப்பலில் இருந்து மிதந்துவரும் பொருள்களை, எடுத்துச் சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை


கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில்  தீ ஏற்பட்டு அது இரண்டாகப் பிளவுபட்டதால், அதிலிருந்து கடலில் விழுந்த கொள்கலன்களிலுள்ள  வெவ்வேறு வகையான, இரசாயனப் பொருள்கள் கரையொதுங்குவதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, விசேடமாக பமுனுகம,துங்கால்பிட்டிய, கொச்சிகடை, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையோரங்களில் மக்கள் ஒன்று கூடி இவ்வாறு மிதக்கும் பொருள்​களை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.

விசேடமாக நேற்று (26) பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் கொரோனா சட்டதிட்டங்களை மீறி, ஒருபுறம் குற்றம் என்றும் மறுபுறம் இது இரசாயன பதாரத்தங்கள் அடங்கிய மனித உடலுக்கு எவ்வகையில் தீங்கை ஏற்படுத்தும் என்பதை அறியாமல், அதனை கொண்டு செல்வதும் மறுபுறம் குற்றம் என்றார்.

எனவே, இவ்வாறு பொருள்களைக் காவிச் சென்றவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றார்.

விசேடமாக பமுனுகம, துங்கால்பிபட்டிய, நீர்கொழும்பு, கொச்சிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் விசேட குழுக்கள் அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத்​ தெரிவித்த அவர், இது தொடர்பான கா​ணொளிகள் கிடைத்துள்ளதாகவும், அதனை அடிப்படையாக வைத்து நடவடிக்கைகள் எடுக்கபடும் என்றார்.

No comments

Powered by Blogger.