Header Ads



வைரலாகும் புகைப்படம் - பொலிஸார் எடுத்துச்செல்லும், அப்பெட்டிக்குள் என்ன இருக்கிறது..??


- TM -

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த, போக்குவரத்துப் பொலிஸார் இருவர், ஒரு பெட்டியுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

உயர் ரக மதுபானங்கள் எடுத்துச் செல்லும் வகையில் அப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், எவ்வகையான போத்தல்கள் அடுக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பிலும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

ஆனால், அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது.

சமூக வலைத்தளங்களில் அந்தப் படம் வைரலாகியுள்ளது.  “அப்பெட்டி ஒரு போதும் வெறுமையாக இருக்காது என நினைக்கின்றேன்” எனக் பலரும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.  

No comments

Powered by Blogger.