Header Ads



கொரோனா ஜனாஸாக்கள் அடக்கம் - அல்லாஹ்விடமிருந்தே தீர்வு வந்தது என்கிறார் அலி சப்ரி


- Anzir -


கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்கள், நல்லடக்கம் செய்யபடுவதற்காக பலரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா தொற்று ஜனாஸா விடயமானது பொறுமையாகவும், நிதானமாகவும் சாதிக்க வேண்டியதை எமக்கு கற்றுத் தந்துள்ளது. எமது சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களை உணர்ச்சியாக அணுகாது, அறிவு ரீதியாக அணுகுவதே சிறந்தது.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எமது சமூகத்திற்கு இதுவொரு நெருக்கடியான காலகட்டம். நமது செயற்பாடுகளும் நமது முன்னுதாரண நடவடிக்கைகளும் அவதானிக்கப்படுகிறது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், வாழும் எமது சமூகத்தினர் பொறுமையாக விடயங்களை கையாளுவோம்.

எப்போதும் எமது நிதானமான செயற்பாடும், பொறுமையுடன் அதை கையாளுதலும் சிறந்த தீர்வினை பெற்றுத் தரும்.

ஜனாஸாக்களை அடக்க வேண்டுமென்பதற்காக பலர் நேர்மையுடன் செயற்பட்டார்கள். பலர் இதற்காக முயற்சித்தார்கள். தற்போது நல்லடக்கம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இது நபர்களின் வெற்றியல்ல. எல்லோருக்கும் கிடைத்த ஒன்று.

எமக்கு கிடைத்த இந்த உரிமையை, சுகாதார பாதுகாப்புடன்: அரசாங்கத்தின் வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட உறுதி கொள்வோம் என்றார்.


8 comments:

  1. It has taken Almost one year for us to get this Racist Govt. to agree to Burial.

    It is two weeks now since this Govt. agreed to permit Burial. But, we are still waiting for the Burial to commence as the Govt. is yet to work out the procedures. The ONLY thing they have done so far is to announce a place where Burial will be allowed and already there is objection from the people living in that place. The Community itself is greatly disappointed at the place chosen Viz. Iranativu.

    At this rate, when will this 'great' concession by the Govt. will actually be implemented?

    Minister Ali Sabry, please DON'T try to sing praises for your Govt. We ALL KNOW your Govt.'s REAL Colour.

    ReplyDelete
  2. பக்குவமாகச் செயல்பட்டவர்கள் பட்டவர்கள் பட்டியலில் முதன்மை உங்களுக்கு. நன்றி.

    ReplyDelete
  3. a emotional day for all Muslims

    ReplyDelete
  4. உண்மை யான பொருத்தமான விளக்கமான கருத்துக்கள்

    ReplyDelete
  5. அதாஉல்லா தான் காகித வேலை செய்தார்!

    ReplyDelete
  6. very good, he didn't politicized the matter...

    ReplyDelete
  7. கொரோனா ஜனாஸாக்கள் அடக்கம் - அல்லாஹ்விடமிருந்தே தீர்வு வந்தது - Alhamdulillah.
    உண்மையான முஸ்லீம்கள் இந்த அறிக்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    புனித குர்ஆன் இதைத்தான் கூறுகிறது:
    "நாங்கள் நிச்சயமாக உங்களை பயம் மற்றும் பசி மற்றும் செல்வம் மற்றும் உயிர்கள் மற்றும் பழங்களின் இழப்புடன் சோதிப்போம், ஆனால் (பொறுமையுடன் இருப்பவர்களுக்கு) நற்செய்தியைக் கொடுப்போம்."
    "முஸ்லீம் குரல்" இந்த பிரச்சினையில் இந்த நம்பிக்கையை சரியானதாக எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.