Header Ads



ஜனாஸா எரிப்பு தொடரும் - பவித்ராதான் தடையை நீக்கும் உத்தரவை விடுக்க வேண்டும் - Dr சுதர்சினி


கோவிட்டினால் மரணமாவோரின் அடக்கம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியே முடிவெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது கொரோனா தொற்றுக்காக சிசிச்சை பெற்று வருவதாக முதன்மை சுகாதார நலன்துறை ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்தல் ஒன்றை விடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கோவிட்டினால் உயிரிழந்தோரின் உடலங்கள் தகனம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் கால நிர்ணயம் எதனையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் கோவிட் உடலங்களின் அடக்கம் தொடர்பாக தடையுத்தரவு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியே அந்த வர்த்தமானி தடையை நீக்கும் உத்தரவை விடுக்க வேண்டும் என்று பெர்ணான்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இந்த தடையை நீக்குவதற்கான அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போதும் தகன முறையே தொடர்வதாக சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. செய்தியில் சிறு அச்சுபிழை

    ReplyDelete
  2. 18வது வரியின் இரண்டாவது சொல்தானே. எங்கட பத்திரிகையில் Proof Readers ரொம்ப இல்ல, Unknown. பதிவுகளையும் அவசரமாக வெளியிடனும். என்ன சய்ய சொல்றீங்க.

    ReplyDelete
  3. very good players, better to form a basket ball team with these health ministry members. well passing ball.. im afraid next whom they are going to point and say he has to take final decision.. may be going to say chinese prime minister....

    ReplyDelete

Powered by Blogger.