Header Ads



முஸ்லிம் பெண்கள் எம்மிடம் முறைப்பாடுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர் - Dr சுதர்ஷனி


முஸ்லிம் திருமணச் சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முஸ்லிம் பெண்களே எம்மிடம் முறைப்பாடுகளை முன்வைப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோப்புள்ளே தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ரதன தேரரால் 27/2 கீழ் முஸ்லிம் சட்டங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியை தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது நாட்டில் 18 வயது வரையான சிறுவர்கள் அனைவரின தும் கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்தில் நாம் கையெழுத்திட்டுள்ளோம்.

அதனால் இனம்,மதம்,குல பேதங்கள் கடந்தது அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி கற்றும் சந்தர்த்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

பெண்கள் தொடர்பிலான சர்தேச சீடா பிரகடனத்திலும் கையெழுத்திட்டுள்ளோம். அதன் பிரகாரம் பெண்கள் தொடர்பில் இனம், மதம் மற்றும் குல பேதங்கள் பார்க்கக் கூடாது.

ஒரே சட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் தமது உரிமைகளை உறுதிப்படத்த வேண்டுமென்ற கருத்தை முன்வைத்துள்ளோம்.

முஸ்லிம் திருணமச் சட்டத்தால் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முஸ்லிம் பெண்கள் எம்மிடம் முறைப்பாடுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.


ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

10 comments:

  1. இவர்கள் முஸ்லீம் பெண்கள் அல்ல பாரம்பரிய முஸ்லீம் பெண்கள் அதாவது ஷெய்த்தானை வழிபடும் கூட்டணி.

    ReplyDelete
  2. எல்லா கையெழுத்தையும் பேணுகிறீர்கள். WHO வை தவிர

    ReplyDelete
  3. என்ன மாமி அடுத்த விளையாட்டு ஆரம்பம்மா?

    ReplyDelete
  4. கொவிட் வைரசால் நீர் மாசுபடாது என்று இவர் பாராளுமன்றில் கூறிய விடயம் வன்போக்காளர்களைச் சூடாக்கி இருக்கும் என்பதால் குளிரடையச்செய்ய வழங்கிய குளிர்பான அறிக்கை.

    ReplyDelete
  5. can list who r they and from where they came???

    ReplyDelete
  6. May be they watch daily Cinema & Teledrama

    ReplyDelete
  7. who are they? I think those are Singlish who have Muslim name,

    ReplyDelete
  8. சட்டங்கள் என்பது அதனதன் வரையறைகளுக்குள்த்தான் இருக்கும். இரண்டொருவர் பாதிக்கபபடுகின்றனர் என்பதற்காக சட்டங்களை மாற்ற முடியாது. அப்படியானால் இலங்கையில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் அனைத்தையும் மாற்றியாக வேண்டும். முஸ்லிம் பெண்கள் இஸ்லாமியச் சட்டங்களால் பாதிக்கப்பட்டனர்; பாதிக்கப்படுகின்றனர் என்ற வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. எத்தனையோ முஸ்லிம் பெண்கள் இஸ்லாமியச் சட்டங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்ற மாயை தோன்றுவிக்கப்பட்டாலும் கூட அவ்வாறு முறையிடுபவர்கள் சட்டத்தை அறியாதவரகள்தான். அரபு நாடுகளில் உள்ளவாறு இஸ்லாமியச் சட்டங்களில் திருத்தங்களை அல்லது மாற்றங்களை இஸ்லாமியர்கள் கேட்கவில்லை. அப்படி யான இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இந்நாட்டில் பெண்கள் சம்பந்தமான பாரதூர செயற்பாடுகள் கொலை கொள்ளை போதைவஸ்த்துக்கள் சம்பந்தமான குற்றங்கள் என்பன தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். தலை போகும் என்றால் எவரதான் குற்றச் செயல்களை செய்ய முன்வருவர். சட்டங்களை அரசு முறையாகச் செயற்படுத்த முன்வரும்போது அதனால் பெறும் பயன் உச்ச நிலைக்கே செல்லும். முஸ்லிம் மக்கள் மாத்திரமல்ல வேற்றின மக்களும் கேட்பது தங்களது கலாசாரம் சம்பந்தமான விடயங்களில் மாத்திரம் தங்களது மதம் சார்ந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான உரிமையை மாத்திரம்தான். அது அவரகளது உரிமை மாத்திரம் அல்ல. அரசமைப்பினால் அங்கீகரிக்கப்படடதுமாகும்.

    ReplyDelete
  9. முஸ்லீம் திருமண விவாகரத்து சட்டக்கோவைபோல் திருத்தம் தேவை . அதில் 90 % எமக்கு நலவாகவே இருக்கின்றன. எனவே எவ்வாறு எதிராக சில பெண்கள் முறை எடுக்கின்றார்களோ அவ்வாறே சார்பாகவும் பல பெண்கள் இதே அமைஷ்ஷாரிடம் பேச வேண்டும்.

    ReplyDelete
  10. Dr Sudarshani
    They must complain to the the Muslim Authorities like Board of ULAMAS first. At least it is your duty consult and discuss with the religious councils to verify the truth. It is not correct to act on mere roemers. It is very sensitive and serious subject. System of Muslim laws implemented for more than a century in Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.