Header Ads



இலங்கை ஜனாதிபதி, பிரதமரை அவசரமாக சந்தித்த இந்திய தூதுவர்


கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று (02) இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். 

கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை  அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின் போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும். 

இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 

இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.  அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும் இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு முனையத்தை  100 % இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. இலங்கையின் வௌிநாட்டுக் கொள்கை கீழ்நோக்கி அதள பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. சர்வதேச முத்தரப்பு ஒப்பந்தங்களில் ஒரு நாடு என்றவகையில் இலங்கை கைச்சாத்திட்டால்் அதிலிருந்து விலகுவதற்கு அந்த ஒப்பந்தத்தில் சர்த்துகள் சரியாக உள்வாங்கப்பட்டிருக்கும். ஒருதலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது இறுதியில் அந்த இரண்டுதரப்புகளும் இந்தியா, ஜப்பான் இரண்டு நாடுகளும் அவர்களுடைய ஒப்பந்தத்தை அதில் குறிப்பிடப்படாத வேறு காரணங்களுக்கு அல்லது எதேட்சையாக விலகிக் கொண்டால் அதற்கு நட்டஈடு கொடுக்க நிரப்பந்திக்கப்படும். அந்தவகையில் இரு நாடுகள் அல்லது ஒருநாடு சர்வதேச நீதிமன்றம் சென்று இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால், கோடான கோடி டொலர்கள் நட்டஈடு வழங்க வேண்டிவந்தால் இந்த அரசில் உள்ளவர்கள் அல்லது பிறகு ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் அந்த நட்டஈட்டைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டால் இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தையும் முழுமையாக வழங்கினாலும் சிலவேளை அந்த நட்டஈட்டை வழங்க முடியாது போகும். எனவே எந்த தூரநோக்கும், நாட்டின் நலன்களையும் பற்றி யோசிக்காது மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முடிவுகளுக்கு முழு நாட்டு மக்களும் சுமக்கமுடியாத பளுவைச் சுமக்க எதிர்காலத்தில் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அதுபற்றி அல்லது அந்த ஒப்பந்தத்தில் உள்ள சட்டங்களின் சர்த்துக்களை யாராவது இங்கு விளக்கினால் அனைவருக்கும் பிரயோகனமாக இருக்கும்.

    ReplyDelete
  2. Ithaittaaan solrathu... yaaro kandupiditta ooosiya kuduttu...oosi yetrathungrathu.... Namma muttaalgalukku panam panam ithuthaan mukkiyam naadu evanda adimaya iruntha ivanugalukku enna???

    ReplyDelete

Powered by Blogger.