மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டு - அவசரமாக கூடுகிறது சு.க. மத்திய குழு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(24) மாலை கூடவுள்ளது.
இதன்போது முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
2
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (23) கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில், சில முரண்பாடான நிலைமை இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது என, அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, ஆகையால், அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டின் பேரில் செயற்படுவதற்கான தேவை இல்லை என்றும் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment