Header Ads



கொழும்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்


கொழும்பு மாவட்டத்தில் கொவிட் பரவல் வேகமாக அதிகரித்துள்ளளதன் காரணமாக மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார். 

அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சந்திம ஜிவன் என்ற விரிவுரையாளரால் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் கொழும்பு நகரங்களில் பரவிவருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார். 

,தனால் திருமண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும், அவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்காவிடின் கொழும்பு மாவட்டத்தில் கொவிட் பரவல் அதிகரிக்க கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

எனவே சனநெறிசல் மிகுந்த இடங்களில் சஞ்சரிப்பதை முடிந்தளவு தவிந்த்துக்கொள்ளுமாறும் கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் ரூவான் விஜேமுனி பொது மக்களை கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.