புத்தளம் – மன்னார் பகுதியில் 1,012 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 1,012 கிலோகிராம் மஞ்சள் புத்தளத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, புத்தளம் – மன்னார் வீதியின் இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள உப்பளமொன்றில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 11 மூடைகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Newsfirst

Post a Comment