Header Ads



கொரோனா தொற்றாளர் வீதத்தில் இலங்கை, அபாயத்தை எட்டியுள்ளது என WHO இன் ஆய்வில் தெரியவந்துள்ளது


கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் வீதத்தில், இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வின்படி தெரியவந்துள்ளது என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கொரோனா வைரஸ் பரவும் வீதமான, 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்துவிட்டதாக, மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

இந்த நேர்மறை வீதமானது, ஒரு மாதத்துக்கு முன்பாக 3.0 மட்டத்தில் இருந்தது என்றும் பின்னர், 4ஆம் மட்டத்துக்கு அதிகரித்து, இப்போது 5ஆம் மட்டத்தைக் கடந்து, 5.5 சதவீதத்தில் உள்ளது என்றம் இது அபாயகமான நிலையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வைரஸ் தொற்று இன்னும் சமூகத்திலிருந்து வெளியாகவில்லை என்றும் குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.

அண்மைய தொற்றுக்கள், மேற்படி இரு கொத்தணிளுடனும் தொடர்புபட்டவை என்றும் துரதிர்ஷ்டவசமாக மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.

எனவே இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன என்றும் இதைத் தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் இல்லையேல், பாதகத்தை சந்திக்கவேண்டி வரும் என்றும் அவர் மேலும் கூறினா்.

1 comment:

  1. I think they not belive WHO results or reports.

    ReplyDelete

Powered by Blogger.