Header Ads



கொரோனா குறித்து சுகாதார அமைச்சு, போலியான கருத்தினை உருவாக்குகின்றது - PHI


நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு போலியான கருத்தினை உருவாக்குகின்றது என சாடியுள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எதிர்வரும் வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பலமடங்காக அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.

பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண இதனை தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தின் போது பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறும் மிகவும் ஆபத்தான பகுதிகளை முடக்குமாறும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலைமை கையைமீறிபோய்விட்டது மக்களே இதற்கான விலையை செலுத்தவேண்டியுள்ளது என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை தவிரவேறு வழியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருடஇறுதியில் மேல்மாகாணத்தில் மாத்திரம் காணப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் தற்போது திருகோணமலை மட்டக்களப்பு காலி மாத்தறை அனுராதபுரம் உட்பட பல பகுதிகளில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கிருந்து பரவியது என கண்டுபிடிக்காத நோய்தொற்றும் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இது இலங்கை சமூகதொற்று அளவினை அடைந்துள்ளது என்பதற்கான அறிகுறி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் சுகாதாரம் தொடர்பான ஏனைய அதிகாரிகளும் நாட்டின் கொரோனா வைரஸ் தொடர்பான போலியான தோற்றத்தினை அரசியல்வாதிகளிற்கு உருவாக்கியுள்ளனர் தெரிவித்துள்ளனர் என உபுல்ரோகண குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே உரிய முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை,தாங்கள் தங்கள் பதவிகளை இழக்கலாம என்ற அச்சம் காரணமாக இவர்கள் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அப்ப எல்லா வைத்திய நிபுனர்களைவிடவும் இவர் விசயம் தெரிஞ்சவர் போல.

    ReplyDelete

Powered by Blogger.