Header Ads



SJB இனவாதத்தை கையில் எடுத்தால், கட்சியிலிருந்து வெளியேறுவேன், மிரட்டல் விடுத்த முஜிபுர் ரஹ்மான் Mp


- Anzir -

ஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், இன்று திங்கட்கிழமை (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சற்று ஆவேசப்பட்ட நிலையில் கருத்த வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Mp, ஐக்கிய தேசியக் கட்சி இனவாதமற்ற கட்சி,  சகல சமூகங்களையும் அரவணைத்து சென்ற கட்சி. அதனை விட மேம்பட்ட நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பயணம் அமைய வேண்டும்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர், இனவாதத்தை கையில் எடுத்திருப்பது போன்று தோன்றுகிறது. இதனை ஏற்க முடியாது. இனவாத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன். ஏற்கனவே  ஜனாதிபதி கோத்தபய, பிரதமர் மகிந்த ஆகியோரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுடன் இணையுமாறு எனக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர்.

நான் இனவாதத்திற்கு எதிரானவன். ஐக்கிய மக்கள் சக்தியும் இனவாதத்திற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஆட்சியை பிடிப்பதற்காக இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள். எமக்கு கொள்கையே முக்கியம். அந்தக் கொள்கைக்காகவே நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளேன். இதனை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் நடப்பு வருடத்திற்கான ஆரம்ப தேசிய செயற்க் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற, பாராளுமன்ற உறுப்பினர்களினால் Jaffna Muslim இணையத்திற்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜனாசா எரிப்புக்கு எதிராக, சரத் பொன்சேக்கா பதிவிட்ட கருத்துதொன்றுக்காக அண்மையில் முஜிபுர் ரஹ்மான் பொன்சேக்காவிடம் நேரடியாக முரண்பட்டதும், சஜித் பிரேமதாசவிடம் இதுபற்றி முறையிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. முஸ்லிம்கள்தான் பெரும் இனவாதிகள் எனச் சொல்லும் முஸ்லிம்களுக்கான பதிவு.

    முஸ்லிம்கள்தான் பெரும் இனவாதிகள் என சில முஸ்லிம்கள் கூறுகின்றனர்.ஆனால் முஸ்லிம்கள் இனவாதிகளா என்றால் இல்லை என்பதே உண்மை.ஏனெனில் அவர்கள் ஏனைய இனத்தினரின் உணவு,உடை ,கலாசாரம் சமயம் என்பனவற்றில் தலையிடுவதில்லை.

    ஒருவன் தனது இனத்தினை நேசித்து அமைப்பை உருவாக்குவதோ, உரிமைகளுக்காக குரல் கொடுப்பதோ இனவாதமல்ல.
    அப்படியாயின் கறுப்பினரின் உரிமைகளுக்காக போராடிய நெல்சன் மண்டேலா இனவாதியா? அப்படி இல்லையாயின் எப்படி முஸ்லிம் கட்சிகளின் உருவாக்கத்தை இனவாதம் எனச் சொல்ல முடியும்.

    இன்னும் சிலர் தனித்துவமான ஆடைகளை அணிவதையும் இனவாத குறியீடாக அடையாளப் படுத்துகின்றனர். அப்படியாயின் தனித்துவ ஆடை அணிந்து சமாதானத்தை போதித்த மகாத்மா காந்தி, ராமகிருஷ்ணர் போன்றோர் இனவாதிகளா?இல்லையே.

    ஆக இனவாதம் என்பது அடுத்த இனத்தின் உரிமைகளிலும் அடையாளங்களிலும்
    அடக்குமுறைகளை பிரயோகிப்பதும் அதற்காக தன் இனத்திற்கு ஆதரவளிப்பதுமாகுமேயன்றி தம் இனத்தை நேசிப்பதோ அல்லது அதற்காக குரல் கொடுப்பதோ இனவாதமல்ல.

    ReplyDelete
  2. Mujibur inuma inda katchiyum,athan talaivarayum namburinga? Nengalum Mano ganesanum serndu Western province la keka vatchi edir katchi padavi kidaikka vali senjinga ana sajith National list a minority katchiku tarama apadichan! Sonda maganathil elections padum tolvi, O/L faile a endu inum niraya perku sandegam. Mangudiraya nambi atril erangininga ippa ena nadapu?

    ReplyDelete
  3. we appreciate your stance! SJB also formed with members of racists like champika ranawaka, Fonseka, even sajith!

    ReplyDelete

Powered by Blogger.